பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தமிழில் அறிவியல் செல்வம் முதல் தடவையாகும். பிறகு இந்த ஊர்தி தாய்க்கலத்திலிருந்து கழற்றி விடப்பெற்றது. அது தனியாக ஒரு சுற்று வழியில் அம்புலியைச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இந்த மூன்று வீரர்களும் தாய்க்கலத்திலிருந்துகொண்டு மீண்டும் 24 மணி நேரம் திங்களைச் சுற்றி வந்து சொண்டிருந்தனர். இந்த வீரர்கள் விண்வெளியிலிருந்த வண்ணம் பூமியில் இலட்சக் கணக் காண மக்கள் காண்பதற்காகத் தொலைகாட்சிப் படங்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். திங்களில்இறங்கும் இதைப் பற்றி விரிவான கோட்டுப் படங்கள் (Charts காட்டப்பெற்றன. பூமியில் இராக்கெட்டுத் தளத்திலிருந்து அறிவியலறிஞர்கள் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தனர். அடிக்கடித் தேவையான கட்டளைகளை அனுப்பிக் கொண்டே இருந்தனர். இந்தப் பயணத்தின் பணி, பயணம் தொடங்கிய ஆறாம் நாள் நிறைவு வெற்றது. பூமிக்குத் திரும்ப விரைந்தனர் விண்வெளிவீரர்கள். அன்றைய நாளே பூமியின் ஈர்ப்பு எல்லையை அடைந்தனர். பூமியின் வளிமண்டலத்தைக் கிழித்துக் கொண்டு பசிபிக் மாக்கடலில் விண்வெளிக் கலம் ஒரு குதிகொடை மூலம் பாதுகாப்பாக இறங்கியது. மீட்புக் கப்பல்கள் விரைந்து சென்று அவ்வீரர்களை மீட்டது. கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைவதற்கு முன்னர் 1556 துணைக்கோள்களைக் கடந்து சென்றது. இவை வடஅமெரிக்காவின் ஆகாயப் பாதுகாப்புப் படையினர் அமைத்த பாதுகாப்பு வலையாகும். அப்போலே-40: அம்புலியை அடைவதற்கு 72 மணிநேரம் ஆயிற்று அங்கிருந்து பூமிக்குத் திரும்புவதற்கு 54 மணி நேரம் ஆயிற்று. இந்தப் பயணத்தை மேற்கொள்ள ஆன செலவு 35 கோடி டாலர் இந்தச் செலவில் மிகப் பெரிய திங்கள் மண்டிலச் செலவின் ஒத்திகை மிக வெற்றியுடன் நிறைவு பெற்றது. இந்த வெற்றி அமெரிக்க அறிவியலறிஞர்களின் துறைநுட்பத் திறனுக்கு ஒரு நற்சான்றாகும்.