பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 79 கழுகில் இருந்து கொண்டு ஏனையஇருவரும் அம்புலியை வலம் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் அம்புலியில் இறங்க வேண்டியவர்கள். - சந்திரனுக்கு அண்மை உயரத்தில் சுற்றிக் கொண்டிருந்த கழுகின் சில விசைகளை இயக்கி அதனை அம்புலியின் தரையில் இறக்கினர் அதிலிருந்த விண்வெளி வீரர்கள். கழுகு தரையில் இறங்கியதும் இருவரும் கதவைததிறந்துகொண்டு வெளியே வரவில்லை. அம்புலியில் இறங்கிப் பதினைந்து மணி நேரத்திற்குப் பிறகுதான் அதன் தரையில் அடிஎடுத்து வைக்க வேண்டும் என்பது அவர்கட்கு இடப் பெற்றிருந்த கட்டளை முக்கோண வடிவமான இருசாளரங்கனின். வழியாக அம்புலியின் மேற்பரப்பைப் பார்ப்பதுடன் அப்போதைக்கு மனநிறைவு பெற்றனர். இறங்கிய வேகத்தில் ஊர்திக்கு ஏதாவது ஊறுநேர்ந்துள்ளதா என்பதை முதலில் அவர்கள் சோதித்து பார்த்து ஊறு ஏதுமில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு இனிமையாக உண்டு எட்டு மணிநேரம் உறங்கி ஒய்வு பெற்றனர். எழுந்த பின்னர் இருவரும் அம்புலியில் இறங்கி ஏழு மணிநேரத்தில் தம் பணியை நிறைவு செய்து கொண்டனர். • - பிறகு இருவரும் கழுகில் ஏறிச் சில விசையில் முடுக்கியதும் அந்த ஊர்தி மேலே கிளம்பி அம்புலியை வட்டமிட்டது. இதுகாறும் வட்டமிட்டுக் கொண்டிருந்த கொலம்பியாவுடன் இணைந்து கொண்டது. விண்வெளி வீரர்கள் மீண்டு கழுகிலிருந்து கொலம்பியாவுக்கு வந்து சேர்ந்தனர். தேவையற்ற கழுகினைக் கழற்றி விட்டனர். அது தன்னந் தணியாகச் சந்திரனை வட்டமிட்ட வண்ணம் இருந்தது: தாய்க்கலத்திலிருந்த மூன்று விண்வெளி வீரர்களும் அதிலுள்ள இராக்கெட்டுப் பொறியை இயக்கினர். விண்கலம் மேல் நோக்கித் திங்களின் ஈர்ப்பு விசையினின்றும் வெளிபட்டு பூமியை நோக்கி விரைந்தது. மணிக்கு 8,375 கி.மீ. வேகத்தில் அது வந்து கொண்டிருந்தது. இதே விண்கலத்திலும் இருபகுதிகள் (பணிப்பகுதி, கட்டளைப் பகுதி) இருந்தன.