பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தமிழில் அறிவியல் செல்வம் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தை நெருங்குவதற்குச் சற்று முன்னதாகத் தேவையற்ற பணிப்பகுதியைக் கழற்றி விட்டனர். அது வாயு மண்டலத்தைத் தாண்டும்போது எரிந்து சாம்பலாகி விட்டது. விண்வெளி வீரர்கள் அமர்ந்திருந்த பகுதி மட்டிலும் மணிக்கு 40,000 கி.மீ. வேகத்தில் பூமியை நெருங்கியது. இந்தக் கலம் வெப்பமடைந்து எரிந்து சாம்பலாகாதிருக்க வெப்பத்தடுப்புக் கவசம் ஒன்றிருந்தது. விண்கலம் 5000°F வெப்பத்துடன். பழுக்கக் காய்ச்சியது போன்றிருந்தாலும் வீரர்கள் இருந்த அறை குளிர்ச்சியாகவே (81°F) இருந்தது. விண்கலம் பூமியிலிருந்து 7.2 கி.மீ. உயரத்திலிருந்தபோது இரண்டு குதிகுடைகள் விரிந்து கொடுத்துக் கலத்தின் வேகத்தைத் தனித்தன. 3 கி.மீ. உயரத்தில் மேலும் மூன்று குதிகொடைகள் விரிந்து கொடுத்தன. இதனால் விண்கலம் அதிக அதிர்ச்சியின்றிப் பசிபிக் மாகடலில் குறிப்பிட்ட இடத்தில் வந்து விழுந்தது. வட்டமிட்ட வண்ணம் இருந்த ஹெலிகாப்டர் விமானங்களுள் ஒன்று விண்வெளி வீரர்களை மீட்டு அருகிலிருந்த போர்க்கப்பலில் கொண்டு சேர்த்தது. மாலுமிகள் விண்கலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பேற்றனர். விண்வெளிப் பயணம் தொடங்கினபோது 36 மாடிக் கட்டித்தின் உயரம் இருந்த அமைப்பு அப்பயணம் நிறைவு பெற்றபோது 3,425 மீட்டர் உயரமுள்ள விண்கலம் மட்டிலும்ே எஞ்சி நின்றது. அப்போலோ-IIஇன் கட்டளைப் பகுதியின் எடை மட்டிலும் 12,250 இராத்தல், ஆனால் கிளம்புவதற்கு முன் அப்போலோ-ாஇன் எடை கிட்டத்தட்ட 6,500,000 இராத்தல் ஆகும். (ஈ) அம்புலியில் முதல் மனிதன் : இதுகாறும் எந்த மனிதனும் அம்: வியில் காலடி எடுத்து வைத்ததில்லை! நானூறு கோடி ஆண்டுகளாகச் சந்திரன் விண்வெளியில் உலவி வருகின்றான் என்று மதிப்பிட்டுள்ளனர் வானநூல் அறிஞர்கள். எனினும், மனிதனேயன்றி வேறு எந்த உயிர்ப்பிராணியும் அங்கு