பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தமிழில் அறிவியல் செல்வம் கொண்டாகி விட்டது! உலகில் கோடிக் கணக்கான மக்களின் வாழ்த்துக் குரல்கள் மண்ணதிர விண்ணதிர எழுந்தன: விண்வெளி வீரர்கள் இருவரும் நிலவுலகிற்குத் திரும்புகையில் அம்புலியில் நினைவுக் குறிப்பாக ஒரு பலகையை வைத்து விட்டுத் திரும்பினர். அதில், பூவுலகத்தினின்றும் போந்த மனிதர்கள் இங்குத்தான் அம்புலிமேல் முதலில் அடி வைத்தனர். கி.பி. 1959 ஜூலை மக்கள் குலம் முழுவதற்கும் அமைதி காண வந்தோம் என்ற செய்தி பொறிக்கப் பெற்றுள்ளது. அப்போலோ-ா விண்வெளி வீரர்கள் மூவரும் ஒரே வரியில் கையெழுத்திட்டுள்ளனர். ஒவ்வொரு கையெழுத்தின் கீழேயும் அவர்களது பெயர்கள் அச்செழுத்தில் பொறிக்கப் பெற்றுள்ளன. விண்கல வலவர்களின் கையெழுத்திற்குக் கீழே அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் (ரிச்சர்ட் நிக்லன்) கையெழுத்து உள்ளது. அதற்குக் கீழே ஒரு வரியில் அமெரிக்க அதிபர் என்று அச்செழுத்தில் பொறிக்கப் பெற்றுள்ளது. 229செமீ நீளமும் 194 செ.மீ. அகலமும் உள்ள அந்தப். பலகையில் மேற்குறிப்பிட்ட வாசகத்திற்குமேல் கிழக்கு மேற்குப் பகுதிகட்கு அறிகுறியாக இரு கோளங்கள் பொறிக்கப் பெற்றுள்ளன. மேற்குப் பகுதியில் பொறிக்கப் பெற்றுள்ள ஒரு புள்ளி. அப்போலோ செலுத்தப்பெற்ற கென்னடி முனையைக் காட்டும்’ - 8. விண்வெளி அநுபவங்கள் : விண்வெளிப் பயணத்தில் பயன்படும் அனைத்தையும் சரி செய்து கொள்ளலாம். இப்பயணத்தில் முக்கியமாகக் கருதப் பெறுபவன்.மனிதனே. விண் வ ளியில் அவனுடையப் ப்ாதுகாப்பு. முறைகளில் 39. அப்போலோ அம்புலியில் இறங்கின அன்றே அம்புலிப்பயணம் என்ற என் நூல் அச்சுக்குத் தயாராகி விட்டது.