பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தமிழில் அறிவியல் செல்வம் மூளைக்குச் செல்லுவதில் தடை ஏற்படத் தொடங்குகின்றது. எனறும், மூன்று அல்லது. நான்மடங்கு பளுவிற்கு உட்படுவதால் குருதியோட்டம் கண்ணிற்குச் செல்வது நின்று கண் இருண்டு விடுகின்றது. என்றும் மருத்துவ இயலார் மொழிவர். சாதாரணமாக ஒருமனிதன் மூன்று மடங்கு பளுவைத் தாங்க முடியும் என்றும் நான்கு மடங்கு பளுவைத் தாங்கினால் தலை நிமிர்ந்து உட்கார முடியாது என்றும், கை கால்களைக் கூட அசைப்பதற்குச் சிரமம்படும்வான் என்றும் உடலியல் அறிஞர்கள் உரைப்பர். ஆறு மடங்கு பளுவைத் தாங்க நேரிட்டால் அவன் உணர்ச்சியையே இழந்து விடுகின்றானாம். மூன்றடுக்கு இராக்கெட்டில் செல்லும்பொழுது இந்த அமுக்கம் அதிகரிப்பதும் குறைவதுமாக மூன்று முறை நடைபெறுகின்றது. இந்த அநுபவத்தை இராக்கெட்டு கிளம்பி சுற்று வழியை அடையும்வவரை விண்வெளி வீரர் எடை மிகுந்த நிலையைச் சமாளித்தாக வேண்டும். இதனைத் தாங்கும் நிலை மனிதனை உட்படுத்தும் சோதனை களிலிருந்துதான் உறுதிப்படுத்துதல் வேண்டும். - இ) பயிற்சிகள் : விண்வெளி வீரர்கட்கு மிகுதியான எடை உணர்ச்சியைத் தாங்குவதற்கு பயிற்சிஅளிக்கப் பெறுகின்றது. இப்பயிற்சிக் காலத்தில் ஒரு மருத்துவர் அருகில் இருப்பார். இங்ங்னம் அழுத்தம் ஏற்படும்போது நிற்பதைவிட உட்கார்வது நன்று. அதனைவிடப் படுத்திருப்பது மேலும் நன்று படுத்த நிலையில் அழுத்தத்தைத் தாங்குவது மிகவும் இராக்கெட்டுகளில் இவற்றிற்கேற்றவாறு இருக்கை வசதிகள் சிறந்த சுருள் விசைகளைக் கொண்டு அமைக்கப் பெற்றுள்ளன. (ஈ) எடையின்மை: இராக்கெட்டின் பிடியிலிருந்து விடுபட்டுத் துணைக்கோள் பூமிக்குக் கிடைமட்ட்த்தில் வட்டச் ற்றுவழியில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது அதற்கும்