பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



ஆங்கில அறிவியல் புனைகதை எழுத்தாளர்களுள் மிகவும் புகழ்பெற்றவராக விளங்கக் கூடியவர் ஆர்தர் கிளார்க் என்பவராவார். இவர் இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற பிறகு ஒரு புனைகதைப் புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அதில் "பூமிக்கு மேலே 30,000 கி.மீ. உயரத்தில் செயற்கைக்கோள் ஒன்றை நிலையாகச் சுற்றுப் பாதையில் பறக்கவிடலாம்" என எழுதினார். இஃது அன்றையச் சூழ்நிலையில் படிப்போர்க்கு ஒரு புதுமையான கருத்தாக அறிவியல் சிந்தனையாகவேபட்டது. அந்நூலில் அவ்வாறு வானில் ஏவப்பட்டு நிலை நிறுத்தப்படும் செயற்கைக்கோள் மூலமாக வானொலி, மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒலி, ஒளிபரப்புவதோடு உலகளாவிய முறையில் தொலைச் செய்தித் தொடர்புக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என விரிவாக விளக்கியிருந்தார் அவர். அன்று ஊகமாகக் கூறியிருந்த அனைத்துமே இன்று பயன்பாட்டில் இருந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அவரது அறிவியல் பார்வையும் அறிவியல் போக்கிலான அணுகுமுறையும் எத்துணை வளப்பமுடையதாக அமைந்திருந்தது என்பதை எண்ணிவியக்கிறோம்.

இவ்வாறு அறிவியல் தொழில் நுட்ப புத்தமைப்புகள் எதிர்காலத்தில் எவ்வாறெல்லாம் அமையலாம் என அறிவியல் கண்ணோட்டத்தோடு முன்னறிவிப்புச் செய்தவர்கள் பலராயினும் அவர்களுள் முதன்மையானவராக, இன்னும் சொல்லப்போனால் வருவதுரைக்கும் அதிசய மனிதராக இன்று நம் கண்முன் திகழ்பவர் சிரானோ டி பெர்ஜெராக் ஆவார்.

இவர் சுமார் முன்னூறு ஆண்டுகட்டு முன்பாக "சந்திர மண்டலம்", "சூரிய மண்டலம்" என்ற தலைப்புகளில் இரு நூல்களை எழுதியிருந்தார். இந்நூல்களில் அறிவியல் கற்ப