பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
102

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



எளிதில் நம்மால் அனுமானிக்க முடியாதபடி அதைப் பல அத்தியாயங்களில் அமையுமாறு செய்வதுண்டு. அதேபோல இவர் உருவாக்கும் மர்மத்தையும் யாரும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாதபடி திறமையாகக் கதையைக் கொண்டு செல்வார். சிலசமயம் ஒரு நூலில் இடம்பெறும் மர்மத்தை இன்னொரு நூலைப் படிக்கும்போதுதான் அறிந்து கொள்ள முடியும். சான்றாக, இவரது அருமையான அறிவியல் புனைகதைப் படைப்பான "கடலுக்கடியில் இருபதாயிரம் லீக் தொலைவில்” (Twenty Thousand Leaques under the sea) என்ற கதையில் இடம்பெறும் கேப்டன் நேமோ ஒரு அற்புமான பாத்திரப் படைப்பு. ஆனால் அவன் யார் என்பதை அந்நூலில் அவர் எங்குமே விவரிக்கவில்லை. அந்நூலில் அவனைப் பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளன. ஆனால், இவரது இன்னொரு புனைகதைப் படைப்பான 'மர்மத் தீவு” (The mysterious Iland) என்ற நூலைப் படிக்கும் போதுதான் கேப்டன் நேமோவை பற்றிய மர்மம் துலக்கமடைகிறது.

இவர் தனது அறிவியல் புனைகதைப் படைப்புகளின் கதையைத் திறம்பட, லாவகமாக நடத்திச் சென்று, இறுதியில் கதைக் கருவோடு தொடர்புடைய அறிவியல் உண்மையொன்றை வெளிப்படுத்தித் தெளிவாக்குவார். இது இவருக்குள்ள தனித்திறன் ஆகும்.

இவரைப் பொறுத்தவரை இன்னொரு சிறப்பம்சத்தையும் இங்குக் குறிப்பிட வேண்டும். இளைஞர்களின் மனநிலையைச் சரியாகக் கணித்து, அதற்கேற்ற கருவைத் தேர்ந்தெடுத்து, அதைக் கற்பனை வளத்தோடு சுவைபடக் கூறுவதன் மூலம் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டி மேன்மேலும் படிக்க ஊக்குவிக்கிறார்.

ஜூல்ஸ் வெர்னின் தனித்தன்மை மிகவும் சிக்கலான அறிவியல் உண்மைகளைக்கூட மிக எளிதாக விளக்கு