பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

103


வதுதான். அறிவியலாளர்களால் மட்டுமே புரிந்து கொள்ளும் வண்ணம் கூறிவிடுகிறார்.

அடிப்படையில் ஜூல்ஸ் வெர்ன் ஒரு அறிவியல் அறிஞரோ ஆராய்ச்சியாளரோ அல்ல. சட்டம் பயின்று வழக்கறிஞராக ஆக வேண்டும் என விரும்பியவர். பின்னர் கதாசிரியராக, அதிலும் அறிவியல் உண்மைகளை அடியொற்றிய அறிவியல் புனைகதைப் படைப்பாசிரியராக ஆன பின்னர் அறிவியல் அறிஞர்களை அணுகி அவர்கள் மூலம் அறிவியல் உண்மைகளைத் தெரிந்து, அவற்றைப் புனைகதைகள் வாயிலாக விளக்கும் முறையைக் கடைப்பிடித்து வெற்றி கண்டார்.

தான் ஒரு அறிவியல் அறிஞராகவே ஆராய்ச்சியாளராகவோ இல்லாதது தனது அறிவியல் புனைகதை படைப்புக்குப் பேருதவியாக இருந்தது என அவரே கூறியுள்ளார். இன்னும் சொல்லப் போனால் அறிவியலாளராக இல்லாத தால்தான், அறிவியல் புனைகதைப் படைப்புகளைப் பெருமளவில் எழுதிக் குவிக்க தனக்கு வாய்ப்பாயமைந்தது என்பது அவரது கருத்தாகும்.

இதனால் சில அறிவியல் புனைகதைகளில் அறிவியல் உண்மைகளைச் சரிவர விளக்காதபோதும் . ஏன் - தவறாகக் கூட குறிப்பிடும்போது வாசகர்களும் மற்றவர்களும் அவ்விஞ்ஞானக் கருத்து இவருடைய கற்பனை என்று கருதிக் கொள்ள ஏதுவாயிற்று.

இனி, ஜூல்ஸ் வெர்னின் அறிவியல் புனைகதைகளில் அறிவியல் உண்மைகள் எவ்வாறெல்லாம் இடம் பெற்றுள்ளன என்பதைக் காண்போம்.

ஜூல்ஸ் வெர்ன் விளக்குவதற்கும் கடினமான, புரிந்து கொள்வதற்கும் எளிதாக இல்லாத அறிவியல் உண்மை