பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
104

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



களைக் கதையோட்டத்தில் வெகு எளிதாகப் புரியவைத்துவிடுகிறார். இதற்கு ஏற்ற சான்றாக இவரது அறிவியல் புனைகதைப் படைப்பான உலகைச் சுற்றி எண்பது நாட்களில் (Around the world in Eighty Days) என்ற படைப்பு அமைந்துள்ளது.

சாதாரணமாக உலகை வலம் வரும்போது ஆகும் கால அளவை கணிக்க ஒரு தனி முறை அறிவியல் அடிப்படையில் உண்டு. இக்கால அளவை முதன்முதலில் கணித்தறிந்தவர் போர்த்துக்கீசிய நாடாய்வாளரான பெர்டினான்ட் மெகல்லன் என்பவராவார். இவரது பயணம் ஸ்பெயினிலிருந்து புறப்பட்டு உலகைச் சுற்றி மீண்டும் ஸ்பெயின் வந்து சேர்ந்ததன் மூலம் உலகம் உருண்டை என்பது தெள்ளத் தெளிவாக உலகுக்கு உணர்த்தப்பட்டது.

அவர் உலகைச் சுற்றி வரும்போது சான்லுகர் எனுமிடத்தை 1522 செப்டம்பர் 5-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர் அவ்விடத்தை அடையும்போது 6 தேதி சனிக்கிழை, ஒருநாள் திடீரென அதிகரித்ததற்கான காரணத்தை அவர் ஆராய்ந்துபோது மேற்குத் திசையில் பயணம் செய்தால் ஒரு நாள் இழப்பும் கிழக்குத் திசையில் பயணம் செய்தால் ஒரு நாள் அதிகரிப்பும் ஏற்படும் என்பதைக் கணித்தறிந்து கண்டறிந்தார். உலகப் படத்தில் சர்வதேசத் தேதிக்கோடு என்று ஒரு குறிப்பிட்ட இடம் இன்று குறிக்கப்பட்டு வருகிறது.

இந்த அறிவியல் பூர்வமான உண்மையை ஜூல்ஸ் வெர்ன் தனது அறிவியல் புனைகதையான “உலகைச் சுற்றி எண்பது நாட்களில்” என்ற படைப்பில் மிகத் தெளிவாக உணர்த்துகிறார்.

கதாநாயகன் பிலியஸ் ஃபோக்கின் உலகைச் சுற்றி வரும் போட்டியில் தான் தோல்வியடைந்து விட்டதாக