பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா i09

என்று எண்ணி சிந்தித்தார். உடனே அதற்கேற்றாற்போல் அறிவியல் அடிப்படையில் ஒரு கதை புனையலானார்.

'புளுடோனியம் - 186' என்ற பொருள் இயற்கை விதிகள் வேறுபட்டுள்ள இன்னொரு அண்டத்திலிருந்து வந்ததாகக் கற்பனை செய்து கதை புனையலானார். அந்தப் பொருள் அங்கு வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நம் விதிகளை ஏற்றுக் கொண்டு மேலும் மேலும் உறுதியற்றதாகி விடும். இப்பொருட்கள் பிற அண்டத்திலிருந்து கணக்கின்றிக் கிடைக்குமானால் நமக்கு ஒரு செலவுமின்றி ஏராளமான எரியாற்றல் கிடைக்கும். அதே நேரத்தில் இப்பூமிக்கும் அந்த அண்டத்திற்கும்கூட, பேரபாயம் ஏற்படும். செலவில்லாத எரியாற்றல் மூலத்தை இழக்க யார்தான் முற்படுவர். இவ்வாறு மேலும் மேலும் கதைக்கு கற்பனை வளமூட்டி"தாமே கடவுளர்"(The Gods Themeselves) பெயரில் (1972) அறிவியல் புனைகதைப் புதினத்தை எழுதி வெளியிட்டார். இது பின்னர் புகழ்பெற்ற அறிவியல் புதின மாக விரும்பிப் படிக்கப்பட்டது.

அவர்அறிவியல்புனைகதைக்கான கருவை தன் கனவிலிருந்துகூடப் பெற்றதாகக்கூறியுள்ளார்.அதைப் பற்றி அவர் விவரிப்பதைப் பார்ப்போம் : “ஒரு சமயம் ஒரு நூல் முழுவதுமே எனக்குக் கனவில் தோன்றியது. 1973 ஏப்ரல் 3ஆம் நாள் அன்று ஒரு அதிசயக் கனவுகண்டுஎழுந்தேன். அக்கனவை உடனே என் மனைவியிடம் கூறினேன். உள வியலறிஞர் என்ற முறையில் என் மனைவி கனவுகளில் ஆர்வம் கொண்டவள். அவளிடம் 'நான் இளைஞனாக இருந்த போது, அடிக்கடி படித்து மகிழ்ந்த பழைய அறிவியல் புதினக் கதைகளின் ஒரு தொகுப்பை நான் தயாரிப்பதாகக் கனவு கண்டேன். அதற்குள் கனவு கலைந்து விட்டது” என்று கூறியதாகக் குறிப்பிடுகிறார்.