பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


போக்கையும் தன்மைகளையும் தனக்கேயுரிய முறையில் விளக்குகிறார் ஐசக் அசிமோவ்.

"எனது படைப்புகளில் நேரடி மர்மக் கதைகளாக இல்லாத அறிவியல் புனைகதைகள்கூட, மர்மப் புதிர்களைக் கொண்டி ருக்கின்றன.அவற்றில் ஏதாவ தொரு மர்மப் பொருளை, இடத்தை அல்லது ஆளைக் காணலாம். ஒவ்வொரு கதையின் இறுதியிலும் வாசகரை அதிசயத்தி லாழ்த்துகின்ற அல்லது முட்டாளாக்குகின்ற முடிவினை வைத்திருப்பேன்".

மேலும், விவரிக்கும்போது, அறிவியல் புனைகதைகள் எவ்வகையில் வடிவமைக்கப் படுகிறது? அதற்காகக் கையாளும் கதையமைப்பு உத்திகள் எவ்வகையானது என்பதை விளக்கும்போது,

“ஒரு கதைக்கு முதலில் நான் முடிவைத்தான் தீர்மானிப்பேன். அடுத்துக் கதையை எங்கே தொடங்குவதுஎன்று சிந்திப்பேன். இது தொடர்பாக ஜான் கேம்பில் ஒருமுறை சொன்னதை நான் எப்பொழுதும் நினைவில் கொண்டிருக்கிறேன். 'கதையைத் தொடங்குவதில் தடங்கல்கள் எதுவும் ஏற்படுவதாகக் கண்டால், கதையைக் கூடியவரை பிற்பகுதி யிலிருந்து தொடங்குவது நல்லது என்று கேம்பில் கூறியி ருந்தார். அவர் கூறியவாறே நான் செய்கிறேன். இந்த உத்தி இறுதி வரை வெற்றியளிக்காமல் இல்லை" எனத் தெளிவாகக் கூறி விளக்குவதோடு மேலும் கூறுகிறார் :

“கதையின் முடிவையும் தொடக்கத்தையும் தீர்மானித் தவுடன் எழுதத் தொடங்குகிறேன். தொடக்கத்திற்கும்முடிவுக்குமிடையில்,ஒரு சில உரையாடல்களைத் தவிர வேறெதையும் நான் சிந்தித்துவைப்பதில்லை. எழுதிச் செல்லும் போதே எல்லாக் காட்சிகளும் மனத்திரையில் தோன்றும்,அப்படியேஎழுதுவேன். நெடிய புதினங்களைக்கூட