பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


மாட்டேன். ஆனால், நான் எல்லாவற்றையும்'கேட்கிறேன்' கதையைத் தட்டச்சு செய்வதற்கு அல்லது பதிவுக் கருவியில், சொல்வதற்கு உட்கார்ந்தவுடன், கதை முழுவதும், முக்கியமாக உரையாடல்கள் எனது மூளையிலிருந்து ஒலியாக எழுந்து ஒலித்துக் கொண்டே யிருக்கும். என்னுள்ளே இருக்கும் ஏதோ ஒன்று எடுத்துக் கூறுவது போலவும் அதைக் கேட்டு நான் வேகமாகத் தட்டச்சு செய்வது போலவும் தோன்றும்" எனத் தன் மனவுணர்வுகளைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுவதுபோல கூறி நமக்குத் தன் நிலையை உணர்த்தி விடுகிறார்.

மேலும் கூறும்போது தனது எழுத்துப் போக்குத் தனக்கேயுரிய ஒன்று என்றும், அதைப் பிறர் பேணி நடப்பதை விட அவரவர் மனப்போக்கிற்கேற்ப எழுத்து உத்திகளை வகுத்துச் செயல்படுவதே சாலச் சிறந்ததாய் அமைய முடியும் எனக் கூறுகிறார். இதை அவரது சொற்களிலேயே பார்ப்போம் :

"எனது கதைகளிலும் புதினங் களிலும்நிகழ்ச்சிசெயல்பாடுகளை விட உரையாடல்களே அதிகமாக இருக்கின்றன. என்னுடைய அறிவியல் புனைகதைகளில் நிகழ்ச்சிகள், செயல்பாடுகள், வர்ணனை, குணச்சித்தரிப்பு ஆகியவற்றை விட உரையாடல் களே மிகுதியாக இருக்கிறதெனக் குறை கூறுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறுவது உண்மைதான். ஆனால், நான் என்ன செய்ய முடியும்? எனக்கு வந்த வழியில் நான் எழுதுகிறேன். இந்த வழியில் தான் எழுத வேண்டு மென நான் யாரையும் வற்புறுத்த வில்லை.

எனத் தன்னிலை விளக்க மளிக்கிறார் அசிமோவ்,

புனைகதைகளில் மட்டுமல்ல. அவர் சாதாரணமாக எழுதும் அறிவியல் கட்டுரைகளிலும் நூல்களிலும்கூட, இதே முறையைத்தான் கடைப்பிடித்து எழுதுகிறார்.