பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


மேலும், அறிவியல் துறை வல்லுநர் என்பவர் ஏதேனும் ஓரிரு துறைகளில் நிபுணத்துவம் உடையவராக இருக்க முடியுமே தவிர அனைத்து அறிவியல் துறைகளிலும் பட்டம் பெற்ற வல்லுநராக இருத்தல் இயலாது. சான்றாக. வேதியியல் வல்லுநருக்கு உயிரியலில் உயர் திறமையோ நீரியியலில் பேராற்றலோ இருக்க முடியாது. அவரது அறிவும் திறமையும் வேதியியலில் ஒரு வரையறைக் குட்பட்டதாகவே அமையும் முடியும். அது இயல்பும் கூட,

ஆனால், அறிவியல் புனைகதை படைப்பவரோ அறிவியலின் பல்வேறு துறைகளிலும் பரந்த அறிவு உடையவராக விளங்குகிறார் .எத்துறையின் எப்பொருள் பற்றி ஆர்வத்தோடு படித்தறிந்தும் அப்பொருள் வல்லுநரிடம் விவாதித்து தெளிவுவடைந்தும் தன் படைப்பை உருவாக்குகிறார். அவ்வாறு உருவாக்கிய படைப்பை மீண்டும் அத்துறை அறிவியல்வல்லுநரிடம் காட்டி, கருத்தறிந்து மாறுபாடு இருப்பின் திருத்தி பிழையற்ற படைப்பாக வெளிப்படுத்த முனைகிறார். இதைத்தான் ஜூல்ஸ் வெர்ன் மற்றும் ஐச் அசி மோவின் வாழ்க்கை வரலாறு எடுத்துரைக்கிறது. இதுவே அறிவியல் படைப்பிலக்கியம் படைக்க விழைகிறவருக்கு ஏற்ற வழிமுறையாகவும் இருக்க முடியும்.

ஒருமுறை ஐசக் அசிமோவ் அவர்களிடம் "நீங்கள் வெறும் வேதியியல் பட்டதாரி தானே? உங்களால் எப்படி இயற்பியல், உயிரியல் முதலாக அறிவியலின் அனைத்துத் துறைகளையும் பற்றி ஆழ்ந்த புலமையாளரைப் போல் அறிவியல் படைப்பிலக்கியம் உருவாக்க முடிகிறது?" என வியப்போடு வினவிய வினாவுக்கு மேற்கூறியபடியேவிடையளித்தார்.

இதில் கவனிக்கத்தக்க மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. அறிவியல் துறைகளில் பட்டப்படிப்பு கற்பவர்