பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


எனினும்,உலக மொழிகள் பலவற்றிலும் இதுவரை கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகளை எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்பதிரட்டி,அவற்றை கதையினூடே விவரிக்கப்படும் சூழ்நிலைகள் மூலமும் பாத்தி ரங்கள் வாயிலாகவும் வெளிப் படுத்தி அறிவியல் புனைகதை எனும் மகுடமேற்கச் செய்யும் முயற்சிகளே அதிகம்.

அந்த வகையில் தமிழில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சிறுவர் அறிவியல் புனைகதை இலக்கிய முயற்சிகள் வெற்றி பெற்ற அளவுக்குப் பெரியவர்கட்கான அறிவியல் இலக்கிய முயற்சிகள் அண்மைக் காலம் வரை போதிய அளவு வெற்றி பெறவில்லை என்றே கூற வேண்டும்.

இப்போக்கில் ஒரு பெரும் மாறுதலைத் தோற்றுவித்த பெருமை கவியரசு வைரமுத்து அவர்களையே சாரும். அதிலும், உரை நடையிலேயே இத்தகு இலக்கியங்களை உருவாக்கும் முயற்சிகள் இதுவரை மேற் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கவியரசர் அதிலும் புதுமை காணும் வகையில்,கவிதையாக, அதிலும் புதுக்கவிதையாக "தண்ணீர் தேசம்" என்ற தலைப்பில்அறிவியல்செய்திகளை அளவாகக் கலந்து, அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கியம் ஒன்றை அண்மையில் வெளிப் படுத்தியுள்ளார். அதைப் பற்றி அவர்முன்னுரையில்கூறும்போது,

“தண்ணீர் தேசம்" கடலியலை இலக்கியப்படுத்தும் ஒரு பிள்ளை முயற்சி" எனஅவையடக்கத்தோடு கூறியதோடு,தான்இம்முயற்சியில் முனைப்புக் காட்டியதற்கான காரணத்தை,

“மொத்த வளர்ந்து கொண்டிருந்த மேற்கத்திய கலைகளைத் தமிழுக்குக் கொண்டுவர முதல் குரல் கொடுக்கிறான்