பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

மகாகவி. அந்தக் குரலுக்கு நான் தந்த குறைந்தபட்சமரியாதைதான் இந்தத் “தண்ணீர் தேசம்"

என இப்படைப்பு உருவாக்கத்துக் கான துண்டுதலை அமரகவி பாரதியிடமிருந்துதான்பெற்றதைப் பற்றித் தெளிவுபடக்கூறியுள்ளார்.

கடலைக் களமாகக் கொண்ட படைப்புகள் ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. எர்னஸ்ட் ஹெமிங்வேயின் அற்புதப் படைப்பான 'கடலும் கிழவனும்' (Oldman and the Sea) என்ற நூல் புதினமாக, உரைநடைப் படைப்பாகவும் பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்து உலக மக்களின் பாராட்டைப் பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.

நான்கு மீனவர்களோடு ஒரு காதலனும் காதலியும் கடலுக்குள் செல்ல, படகு பழுதுபட்டதால் கரை திரும்ப இயலாத சூழ்நிலையில், புயல், மழை போன்ற இயற்கைப்பேரிடர்களால் அனைவரும் படும்பாட்டை சுவை படச் சொல்வதுதான் கதை.

இப்படைப்பிற்கான கரு சிறியதாயினும் அறுவரின் வாழ்க்கைச் சம்பவங்களையும் அவர்தம் வன்மை,மென்மைமிக்க மன உணர்வுகளையும் விருப்பு வெறுப்புகளையும்வெளிப்படுத்தும் போக்கில் சுவையாகப் பின்னப் பட்ட அருமையான படைப்பு இது. இடையிடையே கடலைப்பற்றியும் இன்ன பிற அறிவியல் உண்மைகளை திறமையாக வெளிப்படுத்தி, அறிவியல் இலக்கியமாகவே, தன் எழுத்துத் திறமையால் உருமாற்றி விடுகிறார் கவியரசர். கடலியல் தொடர்பான பல்வேறு அறிவியல் செய்திகளைத் தான் திரட்ட மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி முன்னுரையில் கூறும்போது.