பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
128

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



அதைக்கேட்ட காதலி தமிழ் ரோஜா,
“புரியவில்லை' எனக் கூறியபோது,
“வாழும் உயிர்களை வடிவமைத்து தண்ணீர்
70 சதம் தண்ணிர் யானை,
65 சதம் தண்ணீர் மனிதன்
என அமுதமே உன் உடம்பில் ::ஓடுவது 7.2 லிட்டர் உப்புத் தண்ணீர்”

எனக் கலைவண்ணன் கூறியதோடமையாது அடுத்து, நம் உடம்பில் உப்புநீர் ஒடுவது ஏன் என்பதற்கு விளக்கமாக.

"முதல் உயிர் பிறந்தது கடல்நீரில் என்பதால் ஒவ்வோர் உடம்பிலும் இன்னும் ஒடிக்கொண்டேயிருக்கி றது அந்த உறவுத் திரவம்".

என இலக்கிய நயம் நனி சொட்டச் சொட்டச் சொல்வதன் மூலம் உலகில் முதல் உயிரினம் கருக்கொண்டு உருவெடுத்தது கடல் நீரில்தான் எனும் உயிரியல் கொள்கையின் அடிவேரையே அடையாளம் காட்டுகிறார்.

"முதல் உயிர் பிறந்தது கடலிலா?
நம்புவதெப்படி நான்?”

என வினாத் தொடுத்த காதலி தமிழ் ரோஜாவை நோக்கி,

“கடலில் பிறந்த முதல் உயிர் தண்ணீரில்தானே சுவாசித்திருக்க முடியும். அந்த மரபுரிமையின் தொடர்ச்சிதான் இன்றும் கர்ப்பத்தில் வளரும்

சிசு தண்ணீர் குடத்தில் சுவாசிக்கிறது".

எனக் கலைவண்ணன் விளக்கம் சொல்வதன்மூலம் இன்றும் கர்ப்பத்தில் வளரும் சிசு பனிக்குடத்தின் உப்புநீரில் மிதந்தபடி சுவாசித்து வாழ்வதை சுவையாகச் சொல்லி அறிவியல் உண்மைகளை தெளிவாக உணர்த்திவிடுகிறார்.