பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

129


"கடல் நீர் இடம்மாறி நிலப்பரப்பில் நின்றால்
எல்லா இடங்களிலும் மூன்று கிலோமீட்டர்
உயரம் தண்ணீர் நிற்கும்"

என்று கூறுவதன் மூலம் உலகில் 70 சதவிகித நீரின் ஆழ, அகலங்களின் பரிமாணத்தை எல்லோரும் எளிதாக உணரும் வகையில் எடுத்தியம்புகிறார்.

நீரானது உயிர் வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாத ஒன்றாக அமைந்தள்ளது என்பதை எடுத்துக் கூறி உணர்த்த விழையும் கவிஞர். காதலன் தன் காதலியை நோக்கிக் கூறும் வகையில்.

"நீ உணவில்லாமல் ஒரு மாதம் வாழலாம்

நீரில்லாமல் ஒருவாரம் வாழ முடியாது”

என உணவிலும் இன்றியமையாதது நீர் என்பதை சிந்தை கொள் மொழியில் செப்புகிறார்.

கதாநாயகன் தன் காதலி தமிழ் ரோஜா மீது கொண்டுள்ள காதல் உணர்வின் கதகதப்பை வெப்பச் சொற்களால் வெளிப்படுத்தும்போதுகூட நிலவியல் பற்றிய அறிவியல் உண்மைகளை அருமையாக வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.

“பூமியின் அடிவயிற்றில் கனன்று
கொண்டிருக்கும் அக்கினிமாதிரி என்
மனத்தில் கனன்று கொண்டிருக்கும் ஆசை
அக்கினி உன்னைச் சுடவில்லையா?”

என வினாவெழுப்புவதன் மூலம் தன் காதல் கணப்பை

மட்டும் காதல் வெளிப்படுத்தவில்லை. அதன் மூலம் சூரியனில் ஏற்பட்ட பெருவெடிப்பின் (Big Bang) போது