பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131


மணவை முஸ்தபா 131

 "ஆண் உடம்பில் ரத்தம் 
               ஐந்தறை லிட்டர்
 பெண்உடம்பில் ஐந்து லிட்டர்
                        என்ற

பேதமிருந்தாலும் செல்களின்

        செயல்கள் ஒன்றுதான்"

எனக் கூறுவதன் வாயிலாக 'உடலில் உள்ள இரத்த அளவு சிறிது வேறுபடினும் இரத்தத்தை மூலாதாரமாகக் கொண்டு செயல்படும் செல்களாகிய உயிரணுக்களின் செயல்பாடுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றாகவே உள்ளன' என்ற உண்மையையும் அச்செயல்பாடுகளின் விளைவுகள் ஒன்றாகவே உள்ளன என்ற உண்மையையும் எளிதாக உணர்த்திவிடுகிறார் கவியரசு.

 கடல் மீது அளவிலாக் காதல் கொண்ட கதாநாயகன் கலைவண்ணன், கடலைவிட தன் காதலி தமிழ் ரோஜாவின் மீது அதிகக் காதல் கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் போது, அதற்கான காரணத்தை நயமாகவும் நையாண்டியாகவும் வெளிப்படுத்துகிறான்.

"உண்மையில் நீங்கள் நேசிப்பது கடலையா? என்னையா?”

இது வெகுண்டெழுந்த காதலியின் ஐயப்பாடு, இதை இதமாக தீர்த்துவைக்க முனைந்த கலைவண்ணன்,

"உன்னைத்தான்-நிச்சயமாய்

               உன்னைத்தான்

கடலைவிட மதிப்புடையவள் என்

                    காதலியே

நீதான்"

'கடலைவிட மதிப்புடையவளா?”

அவள் கண்விரிந்தாள். என வர்ணிக்கும் கவிஞர், அடுத்து ஒரு அறிவியல் செய்தியை,