பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


இந்நூல் உருவாக்கத்துக்கு உந்து சக்தியாக அமைந்தது அண்மையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 'அறிவியல் இலக்கியம்' என்ற தலைப்பில் நான் ஆற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவுகளாகும். இரு சொற்பொழி வுகளையும் செவிமடுத்த பல்கலைக் கழகத் தமிழ்ப் புலத் தலைவர் அருமை நண்பர் டாக்டர் எழில் முதல்வன் அவர் களும் ஆய்வறிஞர் டாக்டர் ராதா செல்லப்பன் அவர்களும் மற்றும் ஆய்வு மாணவர்களும் இன்றைய சூழலில் அறி வியல் புனைகதைப் படைப்பிலக்கியச் சிந்தனை மிக இன்றி யாதனவாகையால், இப்பொழிவை விரிவாக்கி நூலுருவில் எழுதுமாறு பெரிதும் தூண்டினார்கள். அதன் விளைவே இப்போது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்நூல்.

இதுவரை தமிழில் உருவாகி வெளிவந்துள்ள அறி வியல் படைப்பிலக்கியங்களைப் பற்றி விரிவாக ஆராயா விட்டாலும் அவற்றின் இன்றைய நிலை பற்றிய ஒரு சிறு அளவீட்டை கோடிட்டுக் காட்ட முயன்றுள்ளேன். அவை களைப் பற்றி விரிவாக ஆய்ந்து நூலெழுத வேண்டுமென்ற வேட்கை எனக்குண்டு. உருவாகும் அந்நூலிருந்து படைப்பி லக்கிய குறை நிறைகளை அறியவும் குறை களைந்து நிறை பெறவும் வாய்ப்பேற்படும் என்பது என் துணிவு.

தமிழில் அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கி யங்கள் பெருமளவில் உருவாக ஒர் உந்து சக்தியாக இந்நூல் அமைய வேண்டும் என்ற வேட்கையோடு எழுதி வெளியிட் டுள்ளேன். இந்நூலுக்குச் சிறந்ததோர் முன்னுரையை சிறந்த அறிவியல் ஆய்வறிஞரும் அறிவியல் தமிழிலக்கிய ஆர்வல ருமான சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் டாக்டர் ப.க., பொன்னுசாமி அவர்கள் வழங்கியுள்ளார். என்மீது என்றுமே அன்பைப் பொழிந்து ஆதரவுக் கரம் நீட்டுபவர். என் அறிவியல் தமிழ்ப் பணிக்கான வேகமுடுக்