பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


என்ற பூகோளத் தகவல்களை யெல்லாம் தந்து விளக்கும் போது பூமிக்கும் நிலவுக்குமுள்ள ஒட்டும் உறவும் தெளிவாகப் புரிந்து விடுகிறது.

மேலும், நிலவுலகின் தோற்ற வரலாற்றை விவரிக்கும் முறையில் பல்வேறு விதமான பூகோளத் தகவல்களைத் தந்து, அறிவியல் அறிவு புகட்டத் தவறவில்லை.

"இந்த பூமி பிறந்த இருநூறு கோடி ஆண்டுகள் இருக்கும் பொழுது ஆராயப்புகுந்தவர்களின் தோராயக் கணக்கு.

"இதில் முதல் உயிர் முளைத்தது மூன்றரைக்கோடி ஆண்டுகட்கு முன்புதானாம்,

"196 1/2 கோடி ஆண்டுகள் இந்தப் பூமி வெறுமையில்... வெறுமையில்... யாருமற்ற தனிமையில்.”

“காற்றின் ஒசையும் - கடலின் ஒலியும் இடியின்பாஷையும் தவிர 1961/2ஆண்டுகள் வேறொன்றும் சப்தமில்லை.”

"முதல் உயிர் பிறந்தது மூன்றரைக்கோடி ஆண்டுகட்கு முன்புதான். குரங்கிலிருந்து மனிதன் குதித்தது 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்"

என நிலவுலகம் உருவானதையும் உயிர்க்குலம் உருப்பெற்றெழுந்த தையும் பூகோள உயிரியல் அடிப்படையில் செய்திகளைத் திரட்டி, அவற்றை உரிய சந்தர்ப்பத்தில், உரிய முறையில் கோர்வை செய்து விளக்கும் பாங்கு போற்றத்தக்கதாகும்.