பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

143


அதனால் அலைகள், அமாவாசையில்
சூரியனும் சந்திரனும் ஒரே திசையிலிருந்து
பூமியை இழுக்கின்றன. அதனாலும் அலைகள்."
எனக் கூறும் வானவியல் காரணம் தமிழ் ரோஜாவின்
ஐயத்தை மட்டும் போக்கவில்லை. நம் போன்ற வாசகர் களின் சந்தேகத்தையும் போக்கிவிடுகிறது.

கரையில் மட்டுமா பிசாசுக் கதைகள்? கடலிலும் பிசாசுக் கதைகள் ஏராளம் உண்டு. மனப் பிரமையால் இத்த கைய கடல் பிசாசுக் கதைகளுக்கு மூக்கு, விழி வைத்து மீன வர்கள் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கதை கதையாய்ப் பேசி ஆறுதல் அடைவதுண்டு. இந்நிலை இங்கு மட்டுமல்ல, உலகெங்கும் உண்டு எனும் பீடிகை யோடு கவியரசு, பாய்மரப் படகில் கரை சேர வழியறியாது திகைத்துக் கிடக்கும்போது, நள்ளிரவில் கண்டு பயந்து நீரினுள் இழுப்பதுபோல் தோன்றுவதைக் கண்டு பயந்து நடுநடுங்கிய அறுவருள் ஒருவரான மீனவர் பரதனின் பயத்தைக் கண்டு அவனுக்கு ஆறுதல் கூறும் முகத்தான் ஒரு நிகழ்வை, வரலாற்று அடிப்படையில் அறிவியல் ஆய்வுபூர்வமாக எடுத்துக் கூறித் தேற்ற முனைகிறார். அவர் கூறுவதை அப்படியே கேட்போம்.

"பயம் வேண்டாம் பரதன், இப்படிக் கடல்
பிசாசு கண்டு கலங்கும் பயம் உங்களுக்கு
மட்டுமல்ல. உலகம் முழுவதுமிருக்கிறது
சற்றே செவி கொடுங்கள். ஒரு சரித்திரம்
சொல்கிறேன். அட்லாண்டிக் சமுத்திரத்தில்
பெர்மூடாஸ் முக்கோணம் என்றொரு மர்ம
முக்கோணம் இருக்கிறது. அதற்குள் நுழைந்த
கப்பல்கள் காணாமல் போயின. காணாமல்
போன கப்பல்களைத் தேடப் போன