பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்


இலக்கியக் காவியத்துக்கு விஞ்ஞான வர்ணம் பூசி தன் படைப்புக்கு 'அறிவியல் புனைகதைக் காவியம்' என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார். இக்காவியத்துள் கூறப் படும் கடலியல், வானியல், உயிரியல் பற்றிய செய்திகள் பலவும் சாதாரணமாக, அறிவியல் களஞ்சியங்களிலும் அறி வியல் செய்தித் திரட்டுகளிலும் காணப்படக் கூடிய தகவல் களே எனினும், அவற்றை எடுத்து விளக்க இக்கதைப் போக்கில் பொருத்தமான சூழல்களை உருவாக்கிக் கூறு வதன் மூலம் கதைப் போக்கிலேயே அறிவியல் செய்தி களைத் தெளிவாக அறிந்துணர வாசகர்கட்கு வாய்ப்பேற்ப டுத்துகிறார்.

புனைகதைப் போக்கில் அறிவியல் உண்மைகள் உரிய முறையில் இணைத்து, இலக்கிய இன்பச் சுவை கலந்து, கவிதை வடிவில் தருவதில் கவியரசு வைரமுத்து, ஓரளவு சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இஃது பாராட்டத்தக்க பின்பற்றத்தக்க இலக் கிய முயற்சியாகும்.

இதுவரைக் கண்டறியப்பட்ட அறிவியல் தகவல் களை ஆங்காங்கே பெய்வதோடமையாது, இன்றைய அறி வியலின் துரித வளர்ச்சி நாளை எவ்வாறெல்லாம் அமைய முடியும் என்பதை அறிவியல் கண்ணோட்டத்தோடு அனு மானித்துக் கூறவும் கவியரசு தயங்கவில்லை.

இதற்குப் பீடிகையாக,
"இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும் நேரலாம்
இன்று காண்பது நாளை மாறலாம்."

எனக் கூட்டியங் கூறுகிறார் கவிஞர்.

இவ்வுலகில் என்றும் மாறாதிருப்பது மாறுதல் ஒன்று தான் என்பதைக் கூறி உறுதிப்படுத்தும் கவிஞர்.