பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


கியாகவும் திகழும் அவர்களின் ஆழிய அன்புக்கும் கருத்து ணர்வுக்கும் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்ப்புலத் தலைவர் டாக்டர் எழில் முதல்வன் அவர்கள் எனது நீண்டகால நண்பர். தற்காலத் தமிழ்ப் படைப்பிலக்கியம் பற்றிய திறம்பட்ட ஆய்வாளர். நாளையத் தமிழ்பற்றி உரக்கச் சிந்திக்கும் இயல்பினர். எதனையும் காய்தல், உவத்தலின்றி ஆயும் இயல்புள்ள அவர், இந்நூலின் தகுதிப்பாடு பற்றி பல்வேறு உணர்வுகளை கருத் துருக்களாக வெளிப்படுத்தியுள்ளார். அணிந்துரையின் இறுதியில் 'மணவை முஸ்தபாவுக்கு இன்னும் பல பணிகள் காத்திருக்கின்றன. அவை அவரால் மட்டுமே செய்யக்கூடிய பணிகள்' என்று கூறியுள்ள வரிகளை எனக்களித்த பாராட்டாகக் கருதவில்லை. நான் இன்னும் முனைப்புடன் ஈடுபட்டு கடுமையாக உழைத்து, நிறைவேற்ற பணிகளைச் சுட்டிக்காட்டுவதாகவே கருதுகிறேன். அதற்காக என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள தூண்டும் அவரது உணர்வுகட்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூலுக்கு சிறப்பானதொரு வாழ்த்துரையை எனது இனிய நண்பரும் குமுதம் இதழின் ஆசிரியருமான திரு. மாலன் அவர்கள் வழங்கியுள்ளார். அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கியம் பற்றி நன்கு அறிந்தவர் மட்டுமல்ல, அம்முயற்சியில் நெடிய ஈடுபாடுள்ள அறிவியல் படைப்பிலக்கியாளருமாவார். அவரது கருத்துணர்வுகள் நூலுக்கு மேலும் வலு சேர்க்கும் முறையில் அமைந்துள்ளன. எனது எண்ணங்களையும் செயல்பாடுகளையும் நன்கு அறிந்து ணர்ந்துள்ள அவர்களின் வாழ்த்துரைகளுக்கு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.