பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

155


காற்றால் இழுத்துச் செல்லப்படுகிறான். அவன் பல்வேறு நாடுகளிடையேயும் மக்கள் குழுமங்களிடையேயும் செல்லு கின்றபோது, அந்நாடுகளைப் பற்றிய, மக்களினங்களைப் பற்றிய, அவர்தம் நடையுடை பாவனைகள், பழக்கவழங் கங்கள் வாழ்க்கை முறைகள் பற்றிய பல்வேறு செய்தி களைக் காற்றின் துணையோடு அறிந்து, தெளிவாக உணர்ந்து கொள்வதை "பறக்கும் பாப்பா" என்ற தலைப் பிலே சுவையான நூலாகத் தந்தார் 'கல்வி' கோபால கிருஷ்ணன்.

இதே பேப்பர்ச் சிறுவனை மீண்டும் காற்றின் உதவி யினால் பண்டை உலகில் பறக்கச்செய்து, உலகம் எவ்வாறு தோன்றியது, அதற்கும் முன்பு இருந்த நிலை எத்தகையது என்பதையெல்லாம் 'பாப்பா' வுக்குக் காற்று தெரிவிப்ப துபோல் கதை புனையப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின், உயிர்க்குலத்தின் பரிணாம வளர்ச்சியை விளக்கித் தெரிவிப்பதுபோல் கதை புனையப்பட்டுள்ளது.

ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன்பு சூரியனைவிட்டு பிரிந்த உலகம் நானூறு கோடி ஆண்டுகளாக வெப்பம் தணித்து குளிர்ந்து, பின் பலகோடி ஆண்டுகள் இடை விடாமல் மழை பெய்ய, பூமியின் மேலிருந்த கற்பாறை ஓட்டின் ஒரு பகுதி நகர்ந்து போக, அதிலிருந்து உலோக, அலோக, தாதுக்களை கரைத்துக்கொண்டு சென்ற மழைநீர் கடலாகச் சேர, அந்தக் கடல் நீரிலிருந்துதான் ஆதிஉயிர்கள் தோன்றின. சின்னஞ்சிறு உயிர்களாகத் தோன்றிய இவை படிப்படியாக வளர, அதைத் தொடர்ந்து பல்வேறு உயிரி னங்கள் வெவ்வேறு வடிவெடுக்க, அவற்றுள் பிரம்மாண்ட மான விந்தையான வடிவமைப்புகளைக் கொண்ட விலங்கு களைப் பற்றிய பல்வேறு சுவையான தகவல்களை யெல்லாம் பாப்பாவுக்கு காற்று விளக்குவதாக நூல் படைக் கப்பட்டுள்ளது.