பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்


சுருங்கச் கூறினால், உலகில் ஒரு காலத்தில் வாழ்ந்து மறைந்த உயிரினங்களை கதாபாத்திரங்களாகக் கொண்டு சிறுவர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் சுவையாகப் பின்னப்பட்டுள்ள அறிவியல் புனைகதையாகும் இது.

இவரது மற்றொரு சிறுவர் அறிவியல் படைப்பான 'சுண்டுவிரல் சீமா' காந்தம், மின்சாரம், ஆகாய விமானம், ரயில் போன்ற பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றிய சுவையான செய்திகளையும் அவற்றைக் கண்டு பிடித்த விஞ்ஞானிகளைப்பற்றியும் அரிய தகவல்களைத் திறம்படக் கூறும் நூலாகும்.

இந்நூல் ஒரு விஞ்ஞானி, அவரது மனைவி, இவ்விரு வரின் அன்புமகள் சீமா ஆகிய மூவரையும் மையமாகக் கொண்டு புனையப்பட்ட அறிவியல் படைப்பாகும். விஞ் ஞானியாகிய தன் தந்தை கண்டுபிடித்திருந்த உடல் சுருக்கும் மருந்தை, அவருக்குத் தெரியாமல் உட்கொள்ள, மூன்று அடி உயரம் இருந்த சீமா மூன்று அங்குல உயரமுடைய 'சுண்டுவிரல் சீமா' வாக சுருங்கி விடுகிறாள். சுவையான கதைப்போக்கில், சுண்டுவிரல் சீமாவைக் கொண்டு அறி வியல் ஆய்வாளரான அவள் தந்தை மூலம் பல்வேறு அறி வியல் செய்திகளை வெளிப்படுத்த, படிப்போருக்கு அறி வியல் அறிவு புகட்ட முனைகிறார். தன் தந்தையின் மற்றொரு கண்டுபிடிப்பான உடலுக்கு வளர்ச்சி தரும் மருந்தை உட்கொண்டு மீண்டும் தன் பழைய உருவைப் பெறுகிறாள். விஞ்ஞானத்தை விளக்கெண்ணெயாகக் கரு தும் மனப்போக்கு உள்ளவர்கட்கும் சுவையாக அமையும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள அறிவியல் புனைகதைப் படைப்பாகும் இது.

‘சுண்டு விரல் சீமா' போன்றே 'மந்திர வாதியின் மகன்' நூலையும் அறிவியல் படைப்பாக்கியுள்ளார் 'கல்வி'.