பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

159


நூல்களைப் பொறுத்தவரை இவர் கூறுவது ஒரளவு உண் மையே யாகும். உயிரியல் அடிப்படையில் புனைகதைப் படைப்புகளோ அல்லது கதைப்போக்கிலான நூல்களோ அதிகம் இல்லையென்றே கூற வேண்டும்.

'கல்வி' கோபாலகிருஷ்ணன் வழியிலேயே இவரும் கதைப்போக்கிலான அறிவியல் படைப்புகளை உருவாக்கு வதில் வல்லவராக விளங்குகிறார். ஆனால் 'கல்வி'யோ மற்றவர்களோ தம் அறிவியல் படைப்புக்கு எடுத்துக் கொண்ட கருப்பொருளை அல்லது விளக்க முயலும் அறி வியல் செய்திகளைப் பட்டியலிட்டு விளக்குவதில்லை. கதைப்போக்கில் இச்செய்திகளை வாசகர்கள் விளங்கிக் கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறார்கள். ஆனால், ரேவதி, தான் கதைமூலம் விளக்கப்போகும் அறிவியல் செய்திகளை "அறிவியல் உண்மைகள்" என்ற பெயரில் கதையின் முடிவில் தனியே பட்டியலிட்டு வெளிப்படை யாகக் கூறிவிடுவது இவரது தனிப் பணியாகும். இதனால் கதையில் விவரிக்கப்படும் செய்திகளோடு மேலும் பல அறி வியல் நுட்பச் செய்திகளை படிப்போர் அறிந்து கொள்ள இயலுகிறது.

இவர், இதுவரை “அறிவியல் சிறுகதைகள்" என்ற பெயரில் ஆறுநூல்களைத் தனித்தனி தலைப்புகளில் வெளி யிட்டுள்ளார். இந்நூல்களின் தலைப்புகளே ஒருவகை ஆர்வத் தூண்டலை ஏற்படுத்தும் முறையில் “பசுவுக்குப் பசுமை தெரியுமா?,” “நெருப்புக் கோழி நெருப்பைத் தின்னுமா?," "இசையைக் கேட்குமா பாம்பு?,” “பார்த்தா பறக்கிறது வெளவால்?," "தும்பி சிறகை மடக்குமா?," "அடைகாக்கும் அப்பா" என்பதாக நூலின் தலைப்புகள் அமைந்துள்ளன. இவற்றில் ஐம்பத்து மூன்று அறிவியல் சிறு கதைகள் அடங்கியுள்ளன.