பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

புதிய நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் காலம். நடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதும் அடை வேண்டிய இடத்தைக் கருதிப் பார்ப்பதும் கடமையாகிறது. இந்தக் கடமையுணர்ச்சியோடும், நேற்று, இன்று, நாளை என்னும் முக்காலப் பரிணாமம், பரிமாணம் பற்றிய உணர்வோடும் நமது அறிவியல் படைப்பிலக்கியத்தைக் திரு. மணவை முஸ்தபா இந்நூலில் விவரிக்கிறார்.

"இது அறிவியல் ஊழி. அறிவியலின் ஆற்றல் மிகு தாக்கம் மனித குலம் முழுவதையும் முனைப்போடு ஆட் கொண்டுள்ளது. அறிவியல் துணையின்றி அரை அங்குல வாழ்வைக்கூட நம்மால் நகர்த்த முடிவதில்லை" என்று கூறும் ஆசிரியர், "அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப நம் மக்களின் அறிவியல் அறிவும் உணர்வும் வளர்த்திருப்பதாகக் கூற முடியவில்லை" என்று வருந்துகிறார். "நாளுக்குநாள் நம் வாழ்வில் அறிவியல் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழ்நிலையில், அறிவியல் அறிவும், அறிவியல் மனப்பான்மையும் அதிகரிக்க வேண்டுவது அவசியம்" என வலியுறுத்தி, அனைவரும் “ அறிவியல் மனப்பான்மையாளர்களாக உருமாறுவதும், அதற்கான சூழலை உருவாக்கு வதும் காலத்தின் போக்குக்கு அவசியமான இன்றியமை யாத தேவையாகும். இதற்கு நமக்கு பெருந்துணையாக அமையவல்ல பெரும் துறை இலக்கிய துறையாகும், அதிலும் படைப்பிலக்கியத் துறை வாயிலாக இதனை எளி