பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா 169

விண்வீழ் பெரும்பாறையொன்று சனிக்கோளில் 'ஷூ மேக்கர்' எனுமிடத்தில்வீழ்ந்ததைச் செய்தித் தாள்கள்மூலமும் தொலைக்காட்சி மூலமும் படித்தும், கேட்டும், பார்த்தும் அறிந்தோம். இதனால் சனிக்கோளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என அச்சப்பட்டது. ஆனால்,அஃது அங்கு விழுந்த தனால் மாபெரும் பள்ளம் ஏற்பட்டதேயன்றி, வேறு கடும் விளைவுகள் எதையும் ஏற்படுத்த வில்லை,

ஒன்றோடொன்று சுழற்சிப் பாதையில் மோதிக் கொள்ளும் ஆஸ்ட்ராய்டு விண்வெளிப் பாறைகள் சிதருண்ட நிலையில் பூமியை நோக்கி வீழும்போது பூமியின் ஈர்ப்புவிசை காரணமாக மிகுந்த வேகத்தில் காற்று மண்ட லத்திற்குள் நுழையும். அப்போது காற்றின் கடும் உராய்வின் காரணமாக 4.000 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் எரிந்து அனல் பிழம்பு போலாகும். அப்போது பார்ப்பதற்கு ஒரு எரி நட்சத்திரம் போல் தோன்றும். இவை தரையை அடைவதற்கு முன்னதாகவே பெரும்பாலும் எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஒரு சில எரிந்தது போல் மீதமுள்ளது சிறு கல்லாகவோ அல்லது சற்றுப்பெருங்கல்லாகவே எரிந்த நிலையில் தரையை வந்தடைவதுண்டு. இவ்வின் கற்களையே 'எரி கற்கள்' (Meteorte) என அழைக்கிறோம்.

இத்தகைய எரிகற்களை அவ்வப் போது அடையாளங் கண்டு அரும் பொருட்காட்சியங்களில்வைத்திருப்பதைக் காணலாம். அளவில் மிகப் பெரிய விண்கற்களும் உலகின் சில பகுதிகளில் வந்து விழுவதுண்டு. இக்கற்களில் 36 டன் எடை கொண்ட பெரும் விண்கள் கிரீன்லாந்து அருங்காட் சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது வரையில் பூமியில் வந்து விழுந்த விண்கற்களிலே மிகப் பெரியது அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்தில் விழுந்த விண்கல்லாகும். இஃது ஐம்பதாயிரம் ஆண்டுகட்கு முன்பு விழுந்தா