பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181


எந்திர நுட்பக் காரியத்தை அதனால் தன்னிச்சையாகத் திறம்படச் செய்து முடிக்க முடியாது. எனவே, யாராவது ஒருவர் நேரடியாக ஏவுகணையினுள் சென்று சீர்செய்ய முடியும் என்ற கட்டாயச் சூழ்நிலை உருவாகியது. இச்சூழலை ஆசிரியர்,

{{ }}“ராக்கெட் விண்ணை நோக்கிக் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரமே உள்ளது. ராக்கெட் பயணத்தை எக்காரணம் கொண்டும் ஒரு விநாடியும் ஒத்தி வைக்கவே முடியாது. அவ்வாறு செய்தால் உலகை நோக்கி விரைந்து வரும் எரிகல் பரத் நாட்டின் கடலிலோ அல்லது கடற்கரை நகரிலோ விழுவதையோ அதனால் ஏற்படும் மாபெரும் நாசத்தையோ யாராலும் தடுத்துவிட முடியாது”. எனக் கூறி கதையின் உச்சகட்டத்திற்கு, படிக்கும் வாசகர்களை எளிதாக அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.

{{ }}ராக்கெட்டினுள் சென்று ரிமோட் கன்டரோலை உரிய முறையில் மாற்றியமைக்கும் பணியைச் செவ்வனே செய்து முடிக்க எப்படியும் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரமா வது ஆகும். ஏவுகணையோ இன்னும் ஒரு மணிநேரத்தில் தரையைவிட்டு வானைநோக்கிக் கிளம்பியாக வேண்டும். பழுதுபார்க்கச் செல்பவர் விண்ணில் பாய்ந்து செல்லும் ஏவு கணையிலிருந்து திரும்புவது எப்படி? உயிரைப்பணயம் வைத்து மிகச் சிக்கலான இக்காரியத்தில் யாரும் ஈடுபட முனையாதபோது ஒரு இளைஞர் முன் வந்தார். அவர் தான் இளம் விஞ்ஞானி அப்துல் சலாம் எனக் கூறி மேலும் விறு விறுப்பூட்டி கதையை நகர்த்துகிறார் ஆசிரியர்.

{{ }}“ராக்கெட்டிலிருந்து திரும்ப முடியாவிட்டாலும் நாட்டு நலனுக்காக உயிர்விட்ட பெருமை ஒன்றே போதும்! எனக் கூறி ஏவுகணையினுள் சென்று ரிமோட் கன்ட்ரோலைச் செப்பனிடும் பணியில் மூழ்கினார்" எனக்கூறிச்