பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

184 தமிழில் அறிவியல்

              படைப்பிலக்கியம்
 "அப்துல் சலாத்தை நினைத்தபோது அனைவரது முகத்திலும் படர்ந்திருதி மகிழ்ச்சி ரேகை மறைந்து துக்க ரேகைகள் வெளிப்படலாயின. எரிகல் சிதறல்களோடு கலந்து விட்ட ராக்கெட்டிலிருந்து எவ்விதக்செய்தித் தொடர்பு சிக்னல்களும் இல்லாது போயின, இஃது மேலும் அங்குள்ளோர்களிடையே கலக்கத்தை உண்டாக்கியது.
 "ராக்கெட் வீசிய ஆற்றல்மிகு குண்டுகளால் சுக்கு நூறாக வானில் சிதறடிக்கப்பட்ட சிதறல்கள் காற்று மண்டலத்தில் இறங்கியபோது காற்று உராய்வினால் எரியத் தொடங்கின. ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் வானத்தில் நெருக்கமாகப் பறந்து வட்டமிடுவது போல ஒளி விசித் திகழ்ந்தன. ஆயிரக்கணக்கான வண்ணச் சிதறல்கள் வானமெங்கும் வண்ணக்கோலம் அமைத்திருப்பதுபோல் தோன்றின.
 “வானத்தில் இவ்வண்ணக் கோலங்களைத் தொலை நோக்காடிமூலம் ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகளின் கண்கள் அவற்றினூடே அப்துல் சலாமின் விண்வெளி ஓட மாகிய விமானத்தைக் காண்பதிலேயே கருத்துன்றியிருந்தன. எப்படியும் வந்து விடுவார் என்ற அசட்டுத் தைரியம் அத்துணை பேருடைய உள்ளத்திலும் இருக்கவே செய்தன.
 “வானில் மின்னிப் பொழியும் எரிகல் வண்ணச்சித றல்களுக்கிடையே தரையை நோக்கிப் பாய்ந்து வரும் விமா னத்தை தொலைநோக்காடிமூலம் கண்டு கொண்டிருந்த விஞ்ஞானி ஒருவர் மகிழ்ச்சிப்பெருக்கால் சத்தமாகக் கூவத் தொடங்கி விட்டார். அனைவரது பார்வையும் அவரை நோக்கித் திரும்பின. மகிழ்ச்சிப் பெருக்கால் "இறைய ருளால், இறுதியில் எல்லாவகையிலும் வெற்றிபெற்று விட்டோம். அப்துல் சலாமும் தரையிறங்கிக் கொண்டிருக் கிறார்" என்று உரக்கக் கூவி அனைவரது உள்ளத்திலும் பால்