பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

186 தமிழில் அறிவியல்

              படைப்பிலக்கியம்

கதாகும். மர்மச் சூழலும் துப்பறியும் தன்மையும் புதினம் முழுவதும் இழையோடிக் கொண்டிருப்பது குறிப்படித்தக்க மற்றொரு சிறப்பம்சமாகும்.

 அறிவியல் புனைகதை என்பது அதிகம் படித்த, அதிலும் போதிய அளவு அறிவியல் அறிவு பெற்றவர்கட்கே என்ற எண்ணம் பரவலாக இருந்து வருகிறது.
 படிப்பாளிகட்கு மட்டுமல்லாது ஒரளவே படித்தபாமரனுக்கு விஞ்ஞான விந்தைகளை-புதிய கண்டுபிடிப்புச் செய்திகளை புரியச் செய்ய அறிவியல் புனைகதை இலக்கியப் படைப்புகள் பெருந்துணையாயமையவியலும். இன்னும் சொல்லப்போனால் அறிவியல் கல்வி பெற்றவர்கள் கதையின துணையில்லாமலே அறிவியல் செய்திகளை நேரி டையாக அறிந்துகொள்ள முடியும். ஓரளவு படித்த வாசகர் கட்கு அது அவ்வளவாக இயலாத காரியம், எனவே, அவர் கட்குச் சுவையான புனைகதைமூலம் அறிவியல் விஷயங்களைக் சொல்லி புரிய வைக்க வேண்டும். கதைப்போக்கில் அறிவியல் அறிவு பெறுவது எளிதானதாகும், மருத்துவர் சர்க்கரைச் சுற்றோடு கூடிய கசப்பு மருந்தைத் தருவார். அம்மருந்து நோயாளிக்கு வாயளவில் இனிமை தந்து, உள்ளே சென்ற கசப்பு மருந்து அவனறியாமலே நோயை நீக்குகிறதே, அதைப்போல.
 சாதாரண மக்களிடையே புனைகதைமூலம் அறிவியல் செய்திகளைக் கொண்டு செல்ல வெவ்வேறு உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. அவையும் பல்வேறு வகையான வடிவங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று 'வில்லுப்பாட்டு' ஆகும்.
 'வில்லுப்பாட்டு படிக்காதவர்களை மட்டுமல்ல, படித்தவர்களையும் ஈர்க்கும் தன்மையுடையது. இவ்வாறு அனைத்துத் தரப்பினரையும் ஒருசேர ஈர்க்கும் ஆற்றல்