பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

மணவை முஸ்தபா 189

 திருச்செந்தூருக்கு அந்தக் காலத்தில் வெளிநாட்டார் இரயில் பாதை போட்டார்கள். இரயில் வண்டியும் இரும்புத் தண்டவாளத்தில் ஒரு நாள் கடகட வென்று பாய்ந்தோடி வந்துவிட்டது. மக்கள் கூட்டம்! யாருமே இதை நீராவியின் சக்தி என்று நம்பவில்லை! ஏதோ ஆவி வெள்ளைப்-பிசாசு குட்டிச்சாத்தான்-பூதம்தான் தள்ளிக் கொண்டு வந்தது என்று பயந்து விட்டார்கள்.
 ரயில் வந்து பெருமூச்சு விட்டு நிலையத்தில் நின்றதும் தேங்காய்,பழம்,சூடம்.பூ வாங்கி வைத்து, தண்டவாளத்தில் தட்டி, உடைத்து பூசை செய்து தள்ளி நின்று என்ஜின் மேல் பூப்போட்டு, கற்பூரம் காட்டி, கைகட்டி கும்பிட்டார்களாம்! “புகைக்கும் பூதமே நாங்கள் ஒண்ணும் செய்யலை எங்களை ஒண்ணும் பண்ணிடாதோ!" என்று பயந்து வணங்கினார்களாம். இப்போது உள்ளிருந்து ஒருவர், ஒரு பொறியை தட்டிவிட்டதும். 'உஸ்' என்ற ஒரு பெரிய சப்தம் பக்த கோடிகள், “ஐயோ! பூதம் கோவிச்சிகிட்டதே!" என்று ஒரு துள்ளு துள்ளிப் பக்கத்திலிருந்து கத்தாழை முள்வேலியில் போய் விழுந்தார்களாம்! இது இவர்கள் நிலை!
 அந்த இரயிலை ஒட்டிவந்த வெளிநாட்டு ஒட்டுநர்கள் நிலை என்ன?
 இரயில் நின்றதும், இறங்கி வந்தார்களாம்! ஒரு பாட்டி அங்கு போண்டா விற்றுக் கொண்டிருந்தாள்! அதில் ஒன்றை வாங்கிப் பார்த்திருக்கிறார்கள் அன்னியர்கள் அதை பிட்டுப் பார்த்ததும். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்! “ஓ! Without any cutting, how they put the white மாவு Inside of the போண்டா! ஒரு கட்டிங்கும் வெளியே தெரியலே, எப்படி வெள்ளை மாவை உள்ளே 'பாஸ்'பண்ணினாங்கோ Wonderful small world-என்றாகள்