பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

190 தமிழில் அறிவியல்

              படைப்பிலக்கியம்
 ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள நிலை!இவர்களுக்கு இரயில்-ஒரு பூதம்...! அவர்களுக்கு போண்டா- ஒரு சின்னஞ்சிறு உலகம்!
 இந்த இடைவெளி நீங்க-யாரிடம் நாம் சேதி சொல்ல வேண்டுமோ, அவர்கள் நிலைக்கு-ஆடியோ, பாடியோ சொல்ல வேண்டும்! குழந்தையின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டிக் கொடுக்க வேண்டுமெனில், நாம்தான் குனிந்து தட்டிக் கொடுக்க வேண்டும்? மக்கள் என்றாலே குழந்தைகள்தானே"?
 அறிவியலை சாதாரண மக்களிடையே எளிதாகக் கொண்டு செல்ல வாய்ப்பளிக்கும் மற்றொரு ஆற்றல் மிகு துறை 'கூத்து' எனும் 'கிராமிய நாடகங்களாகும். இக்கூத்து முழுமையான இரவு நேரக் கூத்தாகவும் இருக்கலாம் அல்லது தெரு முனைகளில் குறுகிய நேரத்தில் குறைவான கூட்டத்தினரிடையே நடத்திக்கொட்டும் 'தெரு நாடகங்களாகவும் இருக்கலாம். இரண்டிற்குமே கதை முக்கியம். அக்கதை அறிவியலை அடிப்படையாகக் கொண்டு, அன்றாட வாழ்வுப் பிரச்சினைகளோடு பின்னிச் செல்கின்றபோது, மக்களின் கருத்தையும் கவனத்தையும் எளிதாக ஈர்க்க முடியும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. இந்த முறையை மிகத் திறமையாக செயல்படுத்தி, கேரளாவில் அருமையாக இயங்கி வரும் 'கேரள விஞ்ஞான சமிதி' எனும் அறிவியல் பரப்பும் அமைப்புக் குழவினர் திறம்படச் செய்து வருகின்றனர். அறிவியல் கருத்துகளை உண்மைகளைப் பல்வேறு பாத்திரங்கள் வாயிலாகக் கதைப் போக்கில் எடுத்துச் சென்று மக்களிடம் சேர்ப்பதில் மாபெரும் வெற்றிபெற்று வருகின்றனர். இதன் மூலம் கிராமப்புற மக்கள் பெருமளவில் அறிவியல் அடிப்படையில் விழிப்படைந்து வருகிறார்கள். இத்தகைய நாடகங்களை அதிகச்