பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

வசதிகள்மேனாட்டில் உள்ள அளவுக்கு இங்கு இல்லை என்றாலும் இருப்பவற்றைக் கொண்டு திறம்படக் கூறும் வகையில் கதையை அமைத்துக் கொண்டு செயல் படலாம். சுஜாதா போன்றவர்கள் 'என் இனிய இயந்திரா” போன்ற அறிவியல் படைப்புகளைச் சின்னத் திரையில் திறம்படக் கூற முயற்சி மேற்கொண்டு ஓரளவு வெற்றியும் பெற்றுள் ளார்கள். அம்முயற்சிகள் தொடர வேண்டும்.

அதேபோன்று,பெரியதிரையாகிய திரைப்படத்திலும் அறிவியல் கதைகள் அதிக அளவில் இடம் பெற வேண்டும், தமிழகத்தைப் பொறுத்தவரை திரைப்படங்களில் அறிவியல் அடிப்படையிலான கதையம்சங்களோடு கூடிய படங்கள் விரல்விட்டு எண்ணத் தக்கவகையில் கூட வெளிவர வில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. 'விக்ரம்' போன்ற ஓரிரு பாடங்களைத் தவிர வேறேதும் திரைப்படமாக அரங்கேறியதாகத்தெரியவில்லை. இதற்கு அடிப்படைத் காரணம் அறிவியல் புனைகதைப் பஞ்சமும் அத்தகைய கதைகளைக் காட்சி களாக வடிவமைக்கக் கூடிய வசதிக்குறைவும், அதற்காகச் செலவிடும் தொகையைத்திரும்ப பெற முடியும் என்ற அச்சமும் திரைப்படத் தயாரிப்பாளர்களை இக்கோணத்தில் சிந்திக்க விடாமல் தடுக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அறிவியல் புனைகதைகள் பெருமளவில் தமிழில் வெளி வந்து அவற்றை மக்கள் விரும்பிப் படித்து மகிழும் இனிய சூழ்நிலை உருவாகும்போது, இத்தகைய கதை யம்சங்களோடு கூடிய சின்னத்திரை, பெரிய திரைப்படங்களையும் மக்கள் விரும்பிப் பார்க்கவேசெய்வார்கள் என்பதில்ஐயமில்லை.இதற்கெல்லாம் அடிப்படைத் தேவையாக அமைவது அறிவியல்புனைகதைப் படைப்புகளே என்பது தெளிவு.