பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
200

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

எங்குமுள்ள பள்ளி, கல்லூரி நூலகங்களில் இடம்பெற அரசே ஆவன செய்ய முன்வர வேண்டும். பள்ளிப் பாட நூல்களில் அறிவியல் புனைகதை ஏதேனும் ஒன்றை இடம் பெறச் செய்யலாம். சிறந்த அறிவியல் படைப்பிலக்கிய மொன்றை கல்லூரிப் பாட நூலாகவோ அல்லது துணைப் பாட நூலாகவோ ஆக்கலாம். இதன்மூலம் மாணவர்கள் அறிவியல் புனைகதைகளைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதோடு, அவர்களில் சிறந்த அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கிய ஆசிரியர் உருவாகவும் வழியேற்படும்.