பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


வைத்துக் கொள்ளலாம்) தந்தை ஹாலியூகோ ஜெர்ன்ஸ்பேக் என்றொரு பத்திரிகையாசிரியர், சிறந்த அபுக்கு இவர் பெயரால் இப்போதும் அமெரிக்காவில் 'ஹாலியூகோ விரு துகள் வழங்கப்பட்டு வருகின்றன (எட்கார் ஆலன் போவும் அபுக்களைப் படைத்ததுண்டு என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்).

அறிவியல் புனைகதை என்றால் என்ன என்பதற்கு ஹாலியூகோ சொன்ன இலக்கணத்தின் விளக்கம்தான் நீங்கள் மேலே படித்த உதாரணம். ஹாலியூகோ என்ன சொன்னார்? அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால் அறி வியல் புனைகதை என்பது ஒர் அறிவியல் உண்மையும், எதிர்கால தரிசனமும் (கனவும்) கவினுறக்கலந்த கதை (By Science fiction, I mean a charming romance Intermingled with scientific fact and Prophetic vision)

சரி, அப்படியானால் அதில் அறிவியல் எவ்வளவு சத வீதம் இருக்க வேண்டும்? கதை எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்? அங்கே மனிதர்களுக்கு இடமுண்டா? அப்படி யானால் என்ன இடம்?

தியோடர் ஸ்டர்கியோன் என்று இன்னொரு அபு ஆசி ரியர் இதற்கு ஒரு பிரகடனமே செய்கிறார். 'மனிதர்களின் பிரச்சினை, அதற்கொரு மனிதத்துவமான தீர்வு இவற்றின் அடிப்படையில் மனிதர்களைச் சுற்றி உருவாக்கப்பட்ட கதைதான் அறிவியல் புனைகதைகள். ஆனால் அந்தப் பிரச் சினையும் தீர்வும் அறிவியல் அடிப்படை கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறார் ஸ்டர்கியோன்.

இந்த இலக்கணத்தை ஏற்றுக் கொண்டால் மனிதர் களுக்கு மட்டுமல்ல ராட்சதர்களுக்கும் இடம் கொடுக்கிறது அபு. உதாரணம்: ஃபிராங்கைஸ்டீன் (இந்தக் கதையில் ஒரு அறிவியல் பரிசோதனையின்போது தற்செயலாக ராட்ச