பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


அவசியம் இல்லை என்ற கருத்தை முன் வைக்கும் திரு மணவை முஸ்தபா, அபுக்களுக்கான கருவை எப்படித் தேர்வு செய்வது என்றும் சொல்லிக் கொடுக்கிறார். அத்துடன் நின்று விடுவதில்லை. யூல் வெர்கே, ஜசக் அசிமோவ் போன்றவர்களின் கதைகளின் சுருக்கத்தையும் கட்டிக் காட்டி பின்னர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தைக் விரிவாக அலசுகிறார்.

இவற்றையெல்லாம் படித்துவிட்டு அபுக்களை உரு வாக்க முன்வருகிற இளைஞர்கள் தங்கள் பேனாவைத் திறக்கும் முன் 114, 115 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள யோசனைகளை மீண்டும் மீண்டும் படித்துச் சிந்திக்க வேண்டும்.

தமிழில் வளர்ச்சி காண வேண்டிய புனைகதை வர்க்கத்தைப் பற்றி அக்கறையுடனும் ஆழ்ந்தும் சிந்தித்தி ருக்கும் நண்பர் முஸ்தபா இந்நூலைத் தொடர்ந்து சில அறி வியல் புனைகதைகளை மொழி பெயர்ப்பாகக் கொண்டு வர வேண்டும். எனக் கேட்டுக் கொண்டு அவரை நெஞ்சார வாழ்த்துகிறேன்.


'பாரதி'
சென்னை மாலன்
9-4-97