பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

31


ரய்யா அவர்களின் சிந்தனையில் கூட இவ்வெண்ணம் கருக் கொள்ளாத கால கட்டத்தில்,

"வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்"

எனப் பாடியதன்மூலம் கங்கையின் மிகை நீரை தென் பகுதி ஆறுகளில் பாயச் செய்து, நீரற்ற நிலப் பகுதிகளையும் நீர்வளமிக்க நிலப் பகுதியாக்கி பயிர் செய்து வளங் கூட்டுவோம் என்ற அறிவியல் கற்பனை அவர் கொண்டிருந்த அறிவியல் கண்ணோட்டத்திற்கு அற்புதமான சான்றாகும்.

மிகைநீர் பொங்கிப் பாயும் கங்கையாற்றையும் நீர் வளம் குறைந்த காவிரியையும் இணைக்கும் அவரது கற்பனை சுவைக்குதவாத வெறுங்கனவு அன்று. அறிவியலின் துணை கொண்டு இனிதே நிறைவேற்றத் தக்க ஆக்க பூர்வமான செயலுருவம் பெறத்தக்க ஒன்றாகும் என்பது இன்று நாம் அனைவரும் ஒப்ப முடிந்த உண்மையாகும்.

இவ்வாறு பாரதி,தான் ஓரளவே அறிந்திருந்த அறிவியல் அறிவின் அடிப்படையில், அதன் துணை கொண்டு எதிர்காலத்தில் என்னென்ன நன்மைகளை, பயன்களைப் பெற முடியும் என்பதை ஊகித்தறியும் உணர்வோடு வெளிப்படுத்தினாரே அதுதான் அறிவியல் கண்ணோட்டம் அல்லது அறிவியல் மனப்பான்மையாக அமைகிறதெனலாம். இதற்குப் பெரிதும் அறிவியல் அடிப்படையில் சிந்திக்கும் திறன் வேண்டும். அத்தகையவர்களே அறிவியல் சிந்தனையாளர்களாக, அறிவியல் மனப்பான்மை உடையவர்களாக அமைய முடியும்.

இன்றைய கல்வி முறையில் படித்தவர்களில் அறிவியல் அறிவு மிக்கவர்கள் பலராயினும் அறிவியல் கண்ணோட்டம் அல்லது அறிவியல் மனப்பான்மை வாய்க்கப் பெற்றவர்கள் மிகச் சிலர் தேர்வதுகூட கடினமாக