பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

35


அடியொற்றி வரும் பண்பாட்டுக் கூறுகள் காலப்போக்குக் கேற்ப மெருகடையலாமே தவிர அடியோடு மாறுவ தில்லை. ஆதிகால மனிதத்துவக் கோட்பாட்டிற்கும் இன்றைய மனிதத்துவக் கோட்பாட்டிற்குமிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பதாகக் கூற முடியாது. அவை செயல் படும் முறைகளில் வேண்டுமானால் வேறுபாடிருக்கலாம். ஆனால், அவற்றின் அடித்தளம் அச்சு போன்று இன்னும் ஒரே படித்தாக இருப்பதற்கு 'மனிதத்துவம்' பற்றிய இலக்கியக் கூறுகளே இன்றும் சான்றளித்துக் கொண்டுள் ளன. சங்ககாலத் தமிழ் மக்களின் மனிதத்துவ உணர்வுகளும் குணநலன்களும் அவற்றின் வெளிப்பாடான பண்பாடு களும் திருக்குறள் போன்ற சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட் டுகின்ற முறையில் இன்றும் நாம் பின்பற்ற விழையக் கூடிய வைகளாகவே உள்ளன என்பதை மறக்கவியலாது. என வேதான், இன்றும் தமிழரின் பண்பாட்டை 'வாழும் பண்பாடு' என்று உலகம் அழைத்து மகிழ்கிறது.

ஆனால், அன்றைய சங்க கால மக்களின் சமுதாய வாழ்க்கைமுறை, நடையுடை பாவனைகள், பழக்க வழக் கங்கள், உணவு முறைகளில் எத்தனையெத்தனையோ மாற்ற திருத்தங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் மனிதத்துவக் கோட்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டுவிட வில்லை என்பதற்கு அன்று முதல் இன்றுவரையில் உரு வாகி நிலைபெற்றுள்ள இலக்கியப் படைப்புகளே போதிய சான்றாக அமைந்துள்ளன.

காலந்தோறும் மாறி வரும்
இலக்கியக் கருவும் உருவும்

வாழுகின்ற வாழ்க்கை முறையை வெளிப்படுத்துவது இலக்கியத்தின் நோக்காக அமைந்திருப்பதால் அவ்வக்கால மக்களின் வாழ்க்கைப் போக்கையும் வாழ்வியல் சிந்தனை