பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

போனால் மனிதன் எவ்வளவு பழமையானவனோ அதே அளவு அறிவியலும் பழமையான தொன்றாகும். மனிதன் என்றைக்குச் சிந்திக்கத் தொடங்கினானோ அன்றே அறிவியலும் முளைவிடத் தொடங்கியதெனலாம்.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதன் கடுமையாகக் காற்றடித்தபோது கலங்கினான்; மழை கண்டு மருண்டான்; காட்டுத் தீ பரவக் கண்டு பயந்து நடுங்கினான். கையது கொண்டு மெய்யது பொத்தி வாழ்ந்த மனிதன் கடுங்குளிரின்போது அதன் கடுமையிலிருந்து தப்பிக்க வழியறியாது திகைத்தான். இவ்வாறு தனக்குத் தீங்காயமையும் இயற்கை தரும் இன்னல்களிலிருந்து மீள பாதுகாப்புப் பெற வழி என்ன என்று சிந்திக்கத் தொடங்கிபோதே அறிவியலும் அழுந்தக் காலூன்றி வளரத்தொடங்கி விட்டதெனலாம். இயற்கையை எதிர்த்து மனிதன் தனக்குச் சாதகமமான சூழலை உருவாக்கப் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முனைந்தான். அவற்றின் வளர்ச்சியே அறிவியலின் வளர்ச்சி. அன்று அவன் இயற்கையை எதிர்த்து அதைத் தனக்குச் சாதகமாக உருமாற்றி கொள்ள மேற்கொண்ட முயற்சியே அறிவியலின் வளர்ச்சி வரலாறு. அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் இடையறாது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

மனிதனின் உயர் தகைமை

அறிவியல் வளர்ச்சிக்கான உந்து சக்தியாக சில அடிப்படை மனிதப் பண்புகள் அமைந்துள்ளன. அவற்றில் தலையாயதாக அமைந்திருப்பது அவனது சிந்தனையாற்றலாகும். எதையும் ஆழ்ந்து நோக்கி ஆராய்வது அவனுக்குள்ள அடிப்படைப் பண்பாகும். அதற்கான அறிவுத்திறன், சிலரிடம் மிகுந்தும் சிலரிடம் குறுகியும் உள்ளது. தன் அறிவாற்றலை, சிந்தனைத் திறத்தை, பகுத்தறியும் பண்பை தொடர்ந்து