பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்


ஈர்க்கவே செய்கிறது. மண்ணிலும் விண்ணிலும் அறிவியல் நிகழ்த்தி வரும் விந்தைமிகு செயல்கள் கண்டு சிலர் வியந்து போற்றுவர், புதியது புனைந்து அறிவியல் அற்புதம் நிகழ்த்தக் காரணமான அறிவியல் அறிஞர்களை கண்டு பிடிப்பாளர்களை வானளாவப் புகழ துதித்து மகிழத் தவறு வதே இல்லை.

இன்னும் சிலர், அறிவியல் முன்னேற்றத்தைத் தொடர்ந்து, நிலவில் மனிதன் தடம் பதித்த நிகழ்ச்சி, ஆழ்கடல் ஆராய்ச்சி, ஒலியினும் கடும் வேகத்தில் விரையும் விமானப் பயணம், செயற்கைக் கோள்மூலம் உலகெங்கும் ஒரே சமயத்தில் செய்திப் பரிமாற்றம் போன்ற அறிவியல் விந்தைகளைக் கண்டு திகைக்கின்றனர். வளர்ந்துவரும் அறி வியல் தொழில்நுட்பத் திறத்தினைப் போற்றி மகிழ்வர். ஆயினும், தொடர்ந்து அறிவியல் அறிவைப் பெருக்கிக் கொள்வதில் முனைப்புக் காட்ட முற்படுவதில்லை. விஞ் ஞான வளர்ச்சியை வியக்கத் தெரிந்த அளவுக்கு அறிவியல் நுட்பங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமோ, துடிப்போ ஏற்படுவதில்லை.

இன்னும் சிலர் உண்டு. இவர்கள் அறிவியல் துறை யில் ஏற்பட்டு வரும் அளப்பரிய வளர்ச்சி கண்டு அச்சமும் அவநம்பிக்கையும் கொண்டு அவற்றை வெளிப்படுத்து வதிலே ஒருவித அமைதியும் மகிழ்வும் கொள்வர்.

இவர்கள் அணுவின் ஆக்க சக்தியைப் பற்றி எண் ணாது, அதன் அழிவுத் திறனையே கருதுவர். விண்வெளிச் சாதனைகளும், மரபணுமாற்றம் போன்ற உயிரியல் ஆராய்ச் சிகளும் மனிதகுல மேன்மையைக் காட்டிலும் அழிவுக்கே ஆதாரமாக அமைந்துள்ளன எனக் கருதி, இவ்வறிவியல் விந்தைகளெல்லாம் மனித அழிவில்தான் தம்மைக் கொண்டு செல்லப் போகின்றன என்ற அச்சத்தை அவநம் பிக்கையை அவ்வப்போது வெளிப்பத்தத் தவறுவதில்லை.