பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

56 தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

ரைகள் ஆகியவற்றைப் படிப்பதில் காட்டும் ஆர்வத்தை, அவ்விதழில் இடம் பெற்றுள்ள சிறு கதைகளையும் தொடர் கதைகளையும் படிப்பதில் காட்டுவதில்லை. தொடர்கதைகள் புத்தகமாக வரும்போது படித்துக் கொள்ளலாம் எனக் கருதிப்படிக்காது வாளாவிருந்து விடுகின்றனர். சிலர் மட்டுமே தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களின் சிறுகதை அல்லது தொடராக வரும் தொடர்கதைகளையும் படிக்கின்றனர்

 ஆண்களின் இவ்வகையான படிக்கும் பழக்கத்திற்கு அடிப்படைத் காரணம் சிறுகதை அல்லது தொடர் கதை படிப்பதில் போதிய பொறுமை காட்டுவதில்லை. இதனால் கதைப் படைப்புகளைப் படிப்பதில் இவர்கள் ஆர்வக்குறைவோடு இருப்பதில் வியப்பில்லைதான்.

மாறுபட்ட பெண் வாசகர்கள்

பெண் வாசகர்களைப் பொறுத்தவரையில் இதனினும் சற்று மாறுபட்ட போக்கு நிலவுவதைக் காண முடிகிறது. ஆண்களைக் காட்டிலும் பொறுமைக் குணம் சற்றுக் கூடுதலாக இருப்பதனால் புனைக்கதைகளை - அது சிறுகதையாக இருந்தாலும் குறுநாவல் அல்லது தொடர்கதையாக இருந்தாலும் ஆர்வத்தோடு படிப்பவர்களாக இருக்கிறார்கள், அதிலும், குடும்பச் சிக்கல்களை மையமாக வைத்துப் பின்னப்படும் கதைகளைப் படிப்பதில் அவர்கட்குத் தனி ஆர்வம் உண்டு. இதனால், பெரும் பாலான கதைப் படைப்புகளும் குடும்ப, சமுதாய சிக்கள்களைப் பின்னணியாகக் கொண்டே பின்னப்படுகின்றன என்பது நினைவிற் கொள்ள வேண்டிய செய்தியாகும். ஆயினும், அறிவியல் புனைகதை இலக்கியப் படைப்புகளைப் பொறுத்தமட்டில் இவர்களின் நிலை சற்று வேறுபட்டதாகவே உள்ளது.