பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



களும் காலப்போக்கில் அறிவியல் புனைகதைகளை அதிக அளவில் வெளியிட்டு வாசகர்களின் புதுமை நாட்டத்தை மேலும் தூண்டலாயின. அன்று அறிவியல் கற்பனைக் கதைகளில் விவரிக்கப்பட்ட பல கற்பனைச் சாதனங்கள், கருவிகள் பிற்காலத்தில் ஒரு சில திருத்தங்களுடன் அறிவியல் அடிப்படையில் உண்மையாகவே உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன என்பது வரலாறு தரும் உண்மையாகும்.

அறிவியல் சிறுகதைகளும் நெடுங்கதைகளும் ஹெச் ஜி.வெல்ஸ். பால் ஆண்டர்சன், ப்ராபரி ராபர்ட் ஹைன் லைன், ஜூல்ஸ் வெர்ன், ஐசக் அசிமோவ் போன்ற அறிவியல் இலக்கிய எழுத்தாளர்கள். அறிவியல் அறிவும் படைப்புத்திறனும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர்களாக, பலப்பல படைப்பிலக்கியங்களை ஆங்கில மொழியில் எழுதி வெளியிடலானார்கள். காலப்போக்கில் இவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆங்கிலேயர்களால் மட்டுமல்லாது, ஆங்கிலம் அறிந்த பிற நாட்டு வாசகர்களும் இப்படைப்பிலக்கியங்களை விரும்பிப் படிக்கலாயினர்.

ஆங்கில மொழி அறிவியல் இலக்கியங்களைப் போலவே தமிழிலும் உருவாக்க வேண்டும் என்ற வேட்கை தமிழ் எழுத்தாளர்களிடையே ஏற்பட்ட போதிலும் அறிவியல் அறிவும் படைப்பிலக்கியத் திறனும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணத்தக்க வகையிலேயே இருந்தன. அறிவியல் அறிஞர்கட்கு படைப்புத் திறன் குறைவாக உள்ளது. இலக்கியத் திறன் மிக்கப் படைப்பாளர்கட்கு அறிவியல் ஆற்றல் குறைவு. இரண்டும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர்கள் அதிகம் இல்லாமையால் தமிழ் மொழியில் அறிவியல் இலக்கிய வளர்ச்சி பாராட்டத்தக்க அளவில் மிகச் சிறப்பாக