பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

63


இல்லை என்ற கசப்பான உண்மையைக் கூறாமலிருக்க முடியவில்லை.

படைப்பிலக்கிய ஆசிரியனுக்கு மட்டுமல்ல, படிக்கும் வாசகனுக்கும் படைப்பிலக்கியத்தினுடே விவரிக்கப்படும் அறிவியல் செய்திகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவியல் அறிவும் உணர்வும் இருக்க வேண்டுவது அவசியமாகும். அத்தகு வாசகர்களின் எண்ணிக்கைக் குறைவும் அறிவியல் படைப்பிலக்கிய வளர்ச்சிக் குறைவுக்கு ஒரு காரணம். இந்நிலை அன்று மட்டுமில்லை. இன்றும் பெருமளவில் மாறியுள்ளதாகக் கூறமுடியவில்லை.

அதிகம் சிந்திக்கப்படா அறிவியல் இலக்கியம்

தமிழகத்தைப் பொறுத்தவரை அறிவியல் இலக்கியம்' என்பது அதிகம் சிந்திக்கப்படாத ஒரு துறையாகவே இருந்து வருகிறது. இதழ்களோ வாசகர்களோ அறிவியல் இலக்கியத்திற்கு முதன்மையளிக்கும் மனப்போக்கை இன்னும் நாம் பெறவில்லை என்றே கூற வேண்டும் பொழுது போக்கு இலக்கியத்திற்கு அளித்து வரும் முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட 'பொழுதைப் பயனுள்ள முறையில் ஆக்கும்' அறிவியல் இலக்கியப் படைப்புகளின்பால் எழுத்தாளர்கள் திருப்பவில்லை என்பதுதான் உண்மை நிலை.

இதழ்களின் வணிகச் சிந்தனை

அறிவியல் புனைகதைகள் வெளிப்படாமைக்கு இதழ்களும் ஒரு வகையில் காரணமாகும் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. வணிக நோக்கை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இதழ்கள் பலரும் விரும்பியப் படிக்கும் பாலுணர்வு போன்ற தன்மைகள் வீழ்சி நிற்கும் கதைகளை வெளியிட்டு பெரும்பான்மையான வாசகர்களை மகிழ்விப்