பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

73


வாழ்வில் நாள்தோறும் நாம் காணும் நிகழ்ச்சி களும் பிரச்சி னைகளுமே அவற்றின் கருப் பொருளாயமைகின்றன. கதை சொல்லும் முறையிலும் பாத்திரப்படைப்புகளின் தன்மை யிலும் படிப்போர்க்கு ஆர்வமூட்டுகின்றனவே தவிர பெரும்பான்மையான புனைகதைப் படைப்புகள் படிப் போர்க்குப் புதிய சிந்தனை, புதிய வாழ்வியல் உண்மைகள் எதையும் முனைப்புடன் விளக்க முற்படுவதில்லை. இத னால் இவற்றை எழுதியவருக்குப் பயன் இருந்ததோ இல்லையோ படிப்பவர்க்கு நிச்சயமாக பெரும் பயனேதும் ஏற்படுவதில்லை. எனவே இவைகளை 'பொழுது போக்குப் படைப்புகள் என்று அழைப்பதிலும் தவறில்லை. ஆயினும் புனைகதைப் படைப்புகள் தமிழில் வெளிவரவில்லை என்றும் கூற முடியாது. விரல்விட்டு எண்ணத்தக்க முற் போக்குச் சிந்தனையாற்றல் படைத்த இவ்வெழுத்தாளர் களின் பெரும்பாலான படைப்புகள் சிறுபான்மை வாசகர்க ளையே சென்றடைகின்றன.

பொதுவாக விரைந்து வளர்ந்துவரும் அறிவியலின் அபரிதமான வளர்ச்சியும் அதைப்பற்றிய புதுப்புதுச் செய்தி களும் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கவே செய்கின் றன. அவைகளின் அடிப்படையில் ஆங்கில மொழியில் மேனாட்டு அறிவியல் எழுத்தாளர்களால் படைக்கப்படும் புனைகதைகளும், அவற்றைக் கருவாகக் கொண்டு வெளி வரும் திரைப்படங்களும் படிக்கவும் பார்க்கவும் மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன.

அதிலும், அண்மைக் காலத்தில் தனியார் தொலைக் காட்சி அமைப்புகள் பல தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அவை செயற்கைக் கோள்கள் மூலமாக பல்வேறு அறிவியல் நிகழ்ச்சிகளை, திரைப்படங்களை அடிக்கடி ஒளிபரப்புகின் றன. இவைகள் ஆர்வப் பெருக்கோடு பார்க்கப்படுகின்றன.