பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

மணவை முஸ்தபா 75

 செக்குமாட்டு உணர்விலே சிக்கிக் கிடக்கும் தமிழ் வாசகர்களை மீட்கும் வகையில், அவர்களிடையே காலத்தின் போக்குக்கேற்ப அறிவியல் உணர்வை, விஞ்ஞான மனப்பான்மையை உருவாக்கும் வகையில் அறிவியல் புனைகதைப் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற வேட்கை எழுத்தாளர்களிடையேயும் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பட்டிருக்கவில்லை. இதழாளர்களைப் பொறுத்த வரை, அறிவியல் தொடர்பான புனைகதைகளை வெளியிடு வதன் மூலம் தன் வாசகர்களின் நிலையை உயர்த்த முடியும் என்ற எண்ணமோ, ஆர்வமோ இருந்ததாகத் தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அறிவியல் புனைகதைகளை விரும்பிப் படிக்கவேண்டும்; அதன் மூலம் தங்கள் அறிவியல் அறிவையும் உணர்வையும் பெருக்க, வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பும் பெரும்பாலான வாசகர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை.
 மேனாடுகளில் வேகமாக வளர்ந்து வளமான நிலையை அடைந்துவரும் அறிவியல் புனைகதை இலக்கியத்துறை இங்கு அழுந்தக் காலூன்றும் முயற்சியே இல்லாத நிலைக்கு என்ன காரணம்? கூட்டிக்கழித்துப் பார்த்து ஒட்டு மொத்தமாகக் கூற வேண்டுமானால் அதற்கு ஒரே காரணம் எழுத்தாளர், இதழாளர், வாசகர்களிடையே அறிவியல் இலக்கியம் பற்றிய சிந்தனை அழுத்தம் பெறாமற் போனது தான்.

இலக்கியப் படைப்பில் அறிவியல் செய்தி

 அறிவியல் புனைகதைப் படைப்புகளில் இலக்கியக் தரமுடையனவாக அமைய முடியும். அதேபோன்று வாழ் வியல் உண்மைகளை அடித்தளாமாகக் கொண்டு புனையப்படும் இலக்கியப் படைப்புகளில் அறிவியல் உண்மைகளை வைத்துப் புனைகதை படைப்பதன் மூலம் அதிகச் சிரம