பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


அறிவு வளர்ச்சியும் அறிவியல் உணர்வும் ஊட்டி வளர்க்கப்படுவதோடு இலக்கிய முயற்சிகளும் எல்லா வகையிலும் செழுமையடைகின்றன.

தமிழில் அறிவியல் படைப்பிலக்கிய முயற்சிகள் பல ஆண்டுகட்கு முன்பே தொடங்கப்பட்டிருப்பினும் அதன் வளர்ச்சியில் வேகமோ விறுவிறுப்போ இருப்பதாகக் கூற முடியவில்லை. மேனாட்டின் அறிவியல் படைப்பிலக்கிய வளர்ச்சியோடு ஒப்பிடும்போது நம் வளர்ச்சி குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. இந்த மாபெரும் இடைவெளி உடனடியாகக் குறுக்கப்பட வேண்டும். இதைக் காலத்தின் கட்டாயம் எனக் கூறுவதை விட 'கட்டளை' என்றே சொல்லலாம்.

மிகச் சிறந்த இலக்கிய மொழியாகத் தமிழ் அமைந்திருந்தும் சிந்தனையாற்றலும் கற்பனைத் திறனும் அறிவியல் அறிவும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற படைப்பாளர்கள் பலர் இருந்தும்கூட, அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கியங்கள் பெருமளவில் தமிழில் உருவாகாமைக்கு என்ன காரணம்? எது தடையாக உள்ளது? அத்தடைகளைத் தகர்க்க என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகள், சிந்தனை வடிவில் என்னுள் எழுந்து சில ஆண்டுகளாக அழுத்தம் பெறத் தொடங்கின. இக் கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியே இப்போது நூலுருவாய் உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டுள்ளது.

அறிவியல் புனைகதை இலக்கியம் பற்றிய சரியான கருத்துரு வாசகர்களிடையே மட்டுமல்ல, படைப்பாளிகளிடையேயும் இல்லாதிருப்பது வருந்தத் தக்க ஒன்றாகும். படைப்பிலக்கிய ஆசிரியர்களில் பெரும்பாலோர் அறிவியலில் துறைபோகியவர்கள் அல்லர். எனவே, அறிவியல் அடிப்படையில் படைப்பிலக்கியம் உருவாக்க அவர்களி