பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

89


கலைஞர். வானில் பறக்க வல்ல விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கு நானூறு ஆண்டுகட்கு முன்பே வானில் பறக்கக் கூடிய விமானத்தை ஒவியமாகவே தீட்டலானார். அவர் அறி வியல் பூர்வமாக, கற்பனையாக வடிவமைத்த விமான ஒவியத்தை ஒரு அறிவியல் கற்பனையாக மட்டுமே அன்றைய அறிவுலகம் கருதியது. அதுவே பிற்காலத்தில் ஹெலிகாப்டராக உருவாக்கப்பட்டு வானில் பறக்க விடப்பட்டது. மோட்டார் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் ஒரு ஹெலி காப்டரின் இறக்கைகள் எவ்வாறு இயங்கும் என்ற கேள்விக்குறி அன்று அனைவர் முன்பு தோன்றினும் இன்று அவை அனைத்தும் செயல் வடிவில் வெற்றி பெற்றுள்ளதை நம்மால் காண முடிகிறது.

இன்று கொலம்பியா விண்வெளிக்கலம் போன்றவற்றை விண்ணில் ஏவி வலம் வரச் செய்துள்ளோம். ஆனால், விண்வெளிக்கலம் வடிவமைக்கப்படாத காலத்தில், அதற்கான தொழில் நுட்ப அறிவு வளராத ஒரு காலச் சூழலில், விண்ணை நோக்கி விண்கலத்தை உந்திச் செலுத்த போதுமான உந்து சக்தியை உருவாக்க முனைப்புக் காட்டாத ஒரு கால கட்டத்திதான் விண்வெளிகளில் கலம் செலுத்தும் அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கியங்கள் பல வெளி வரலாயின. ஜூல்ஸ் வெர்ன் போன்ற அறிவியல் புனைகதை யாசிரியர்கள் "சந்திரக் கப்பல்" போன்றவற்றை விண்ணில் செலுத்திப் பறக்கவிட்டதோடு துணை ராக்கெட்டுகளைப் பற்றியும் எழுத்தில் வடிக்கலாயினர். இத்தகு கற்பனைப் படைப்புகளே பிற்காலத்தில் முறையான செயற்பாடுகளோடு கூடிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளாக அமைந்தன. மனித குலத்தை வேகமாக நகரச் செய்த “சக்கரம்” கண்டுபிடிப்பும், வானளாவ உயர்ந்து நின்று இன்றும் உலகை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கும் எகிப்தின் பிரமிடுகளும் இத்தகைய அறிவியல் தொழில் நுட்ப அற்புதங்க