பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
90

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



ளாகும். இன்றையக் கணிப்பொறி வளர்ச்சியின் முத்தாய்ப் பாக நாளை முகிழ்க்கப்போகும். 'மைக்ரோ கணிப்பொறி' அமைப்பு இன்றைய விஞ்ஞானிகளின் கற்பனை வளமிக்க கனவுதானே!

மனிதன் செய்யக்கூடிய பணிகளில் மிகக் கடினமானவற்றையும் அபாயகரமானவற்றையும் எளிதாகச் செய்து முடிக்க ரோபோ என்ற எந்திர மனிதக் பல தொழிற் சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படியொரு எந்திரத்தைக் கண்டுபிடிப்பதற்கு பல ஆண்டுகட்கு முன்னரே இத்தகையதொரு கருவியை கற்பனையாகப் படைத்து, தன் அறிவியல் புனைகதைப் படைப்பில் உலவவிட்டார் காரல் காப்பெக் (1890-1938) என்ற செக் நாட்டு எழுத்தாளர். அவரது அறிவியல் புனைகதை இலக்கியத்திலிருந்து (1912) தான் ரோபோ என்ற சொல்லே மற்றவர்களுக்கு அறிமுகமாகி யது. இன்று பல தொழிற்சாலைகளிலும் முக்கியப் பங்காற்றிவரும் “ரோபோ" எந்திர மனிதக் கருவிகள் பெயர் அன்றைய அறிவியல் புனைகதை இலக்கியம் வழங்கிய பெயராகும்.

இன்றைக்கு ரோபோக்களின் செயல்பாடே மேலும் பல அறிவியல் புனைகதைகள் உருவாக வலுவான கருவாக அமைந்து வருவதை யாரும் மறுக்க முடியாது.

மனிதனுக்கு எல்லா வகையிலும் துணையாக இருக் கும் வகையில்தான் தங்கள் அறிவியல் புனைகதைகளில் படைப்பாசிரியர்கள் ரோபோக்களை உருவாக்கி உலவவிட்டார்கள்.

இன்று தொழில்நுட்ப அறிவின் விளைவாக உருவாக்கப்பட்ட ரோபோக்கள் விரிவான வளர்ச்சி கண்டு, மனிதனையே விஞ்சும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இதனைக் கண்ணுறும் அறிவியல் புனைகதை ஆசிரியர்