பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

91


களால் உருவாக்கப்படும் ரோபோ எந்திர மனிதர்கள், தம்மைக் கண்டுபிடித்தோரின் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்படும் அரக்கர்களாகக் காட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ரோபோவின் ஒருவகை பரிணாம வளர்ச்சியைக் காட்டுவதாயுள்ளது. அறிவியல் புனைகதைப் படைப்பாசிரியர்களில் வேறொரு சாரார், இத்தகு ரோபோக்களிடம் கனிவோடும் பரிவோடும் நடந்து கொள்ள வேண்டும் என்ற அளவில் தம் அறிவியல் புனைகதைகளில் ரோபோ பாத்திரங்களைப் படைக்கலாயினர்.

ரோபோ பற்றிய அறிவியல் புனைகதைகளில் ரோபோக்களின் செயற்பாடுகள் எவ்வாறெல்லாம் அமைந்திருந்ததாக விளக்கப்பட்டிருந்ததோ அதன் அடிப்படையிலேயே இன்று தொழிற்சாலைகளிலும் பணிமனைகளிலும் ரோபோக்களின் பணி அமைந்து வருகிறது. இன்று புதிதுபுதிதாக வெளிவரும் ரோபோ பற்றிய அறிவியல் புனைகதைகளில் மனிதனைப் போல-சிலசமயம் அவனது ஆற்றலை யும் சிந்தனைத் திறத்தையும் விஞ்சும் வகையில் ரோபோக் களின் செயல்பாடுகள் அமைவதாகச் சித்தரிக்கப்படுகின்றன.

இன்று லேசர் ஒளிக்கதிர் கற்றைகளைக் கொண்டு எத்தனையோ அரிய பணிகள் எளிதாக நடைபெறுகின்றன. இன்று மருத்துவத் துறையிலும் செய்தித் தொடர்புத் துறையிலும் லேசர் ஒளிக்கதிர் இன்றியமையா ஓர் அம்சமாக அமைந்து வருகிறது. சுமார் முப்பது ஆண்டுகட்கு முன்னர் லேசர் ஒளிக்கதிர் கற்றைகளைப் பற்றிய சிந்தனை விஞ்ஞானிகளிடையே பரவலாகக்கூட இருந்திருக்கவில்லை. அதன் பயன்பாடுகள்பற்றி அறிவியல் உலகம் அறிந்திருக்க வில்லை. ஆனால், முப்பதாண்டுகட்கு முன்பு அறிவியல் புனைகதைப் படைப்பாசிரியர்களால் முனைப்பாகச் சிந்திக்கப்பட்ட ஒன்று லேசர் ஒளிக்கதிர். இதைத் தங்கள் அறி